Kathir News
Begin typing your search above and press return to search.

தி.மு.க ஆட்சிக்கு வந்தால் மீண்டும் கனிம வளங்கள் சுரண்டப்படும்!

தி.மு.க ஆட்சிக்கு வந்தால் மீண்டும் கனிம வளங்கள் சுரண்டப்படும்!
X

MuruganandhamBy : Muruganandham

  |  24 March 2021 6:30 AM IST

தி.மு.க ஆட்சி வந்தால் கனிம வளங்கள் மீண்டும் சுரண்டப்படும் என்று மதுரை கிழக்கு அதிமுக வேட்பாளர் ஆர்.கோபாலகிருஷ்ணன் குற்றம் சாட்டிப் பேசினார்.

அப்போது, கடந்த 5ஆண்டுகளாக நான் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து மதுரை மக்களுக்காக பல்வேறு திட்டங்களை கொண்டு வந்துள்ளேன் என்பது உங்களுக்கு தெரியும்

எம்.எல்.ஏவாக இருந்த மூர்த்தி கடந்த 5 ஆண்டுகளாக இந்தத் தொகுதி மக்களுக்கு எந்தத் திட்டமும் செய்யவில்லை. ஆனால் அதிமுக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி உள்ளது.

குறிப்பாக 1000 கோடி ரூபாய் மதிப்பில் நத்தம் சாலையில் பறக்கும் பாலம், பாண்டிகோயில் அருகே உயர்மட்ட மேம்பாலங்கள், மூன்றுமாவடி இருந்து ஆனையூர் வரை 50 கோடி ரூபாய் மதிப்பிலான சாலைத் திட்டங்கள், 6 அம்மா மினி கிளினிக் என, இப்படி எண்ணற்ற திட்டங்களை கொண்டு வந்துள்ளது.

மதுரை கிழக்குத் தொகுதி கனிமவளங்கள் நிறைந்த பகுதியாகும். திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் கனிமவளங்கள் பறிபோகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த மாதிரியான சம்பவங்கள் நடக்க கூடாது.

ஆகவே மீண்டும் தமிழகத்தின் முதல்வராக எடப்பாடியார் அமர்ந்திடும் வண்ணம் இந்த கிழக்குத் தொகுதியில் சட்டப்பேரவை வேட்பாளராக போட்டியிடும் எனக்கு இரட்டை இலையில் வாக்களித்து அமோக வெற்றி பெறச் செய்யுங்கள் என்று மக்கள் மத்தியில் பேசினார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News