Kathir News
Begin typing your search above and press return to search.

அப்படி அறிவித்தால் அடுத்த நாளே துரைமுருகன் முதல்வர் போட்டிக்கு வந்துவிடுவார் - நடுநடுங்கும் ஸ்டாலின்! நைஸா உள்ளே வந்த உதயநிதி!

அப்படி அறிவித்தால் அடுத்த நாளே துரைமுருகன் முதல்வர் போட்டிக்கு வந்துவிடுவார் - நடுநடுங்கும் ஸ்டாலின்! நைஸா உள்ளே வந்த உதயநிதி!

MuruganandhamBy : Muruganandham

  |  26 March 2021 2:37 AM GMT

ஸ்டாலின், என்னைப் போல் சொல்ல முடியுமா?. அவர் அப்படி அறிவித்தால் அடுத்த நாளே துரைமுருகன் போட்டிக்கு வந்துவிடுவார் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பகிரங்க சவால் விடுத்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர், ஸ்டாலின் இரண்டு ஆண்டுகளுக்கு முன் என் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் யாரும் அரசியலுக்கு வரமாட்டார்கள் என்று கூறினார்.

குறிப்பாக என்னுடைய மகன் உதயநிதி அரசியலுக்கு வரமாட்டார் என கூறினார். தற்போது அதே ஸ்டாலின், தனது மகனை வேட்பாளராக அறிவிக்கிறார்.

அதுபோல், உதயநிதியும் நான் அரசியலுக்கு வர மாட்டேன் என்றார். தற்போது தந்தையின் விருப்பப்படி அரசியலுக்கு வருவதாகக் கூறுகிறார்.

இப்படி தந்தையும், மகனும் மட்டுமில்லாது தி.மு.க-வினர் அவர்களுடைய சந்தர்ப்ப சூழ்நிலை, கால சூழ்நிலைக்குத் தகுந்தவாறு அவர்கள் நிலைப்பாடுகளை மாற்றிக் கொள்கின்றனர்.

திமுகவில் பிரச்சாரம் செய்ய ஆளில்லையா? துரைமுருகன், நேரு, பெரியசாமி போன்ற மூத்த தலைவர்கள் உள்ளனர். அவர்கள் பேரன் வயது உள்ள உதயநிதி பிரச்சாரம் செய்ய வருகிறார்.

அவர்களை திமுக மூத்த நிர்வாகிகள் ஓடிச் சென்று வரவேற்கிறார்கள். உதயநிதி கார் கதவை நேரு குனிந்து திறந்து விடுகிறார். அப்படி கார் திறந்து விடாவிட்டால் அவர் பதவியில் இருக்க முடியாது.

ஆனால், அதிமுக ஜனநாயகக் கட்சி. சாதாரணத் தொண்டன் கூட, எம்எல்ஏ, அமைச்சராக ஏன் முதல்வராக முடியும். ஸ்டாலின், என்னைப் போல் சொல்ல முடியுமா?. அவர் அப்படி அறிவித்தால் அடுத்த நாளே துரைமுருகன் போட்டிக்கு வந்துவிடுவார் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பகிரங்க சவால் விடுத்துள்ளார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News