Kathir News
Begin typing your search above and press return to search.

தி.மு.க.வின் இந்து விரோத செயல்கள் - ஒரு தொகுப்பு!

தி.மு.க.வின் இந்து விரோத செயல்கள் - ஒரு தொகுப்பு!
X

ShivaBy : Shiva

  |  2 April 2021 6:01 PM IST

இந்து விரோத கட்சியாக இருக்கும் தி.மு.க.வில் அதன் தலைவர் ஸ்டாலின் முதல் இரண்டாம் கட்ட தலைவர்கள் வரை இந்து மதத்தை இழிவுபடுத்தாவர்களே இல்லை என சொல்லிவிடலாம். தேர்தல் நேரத்தில் கூட பெண்களை இழிவாக பேசியும், ஆட்சிக்கு வந்த பிறகு தங்களைத் தடுத்தவர்களை எல்லாம் அதிகாரத்திலிருந்து தூக்கி விடுவோம் என்றும், ஆற்றில் மணல் அள்ளுவோம் என்றும் திமிராக பேசிவரும் தி.மு.க.வினர் இந்து மதத்தை வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் இழிவுபடுத்தியும் பேசி வருகின்றனர்.







இதற்கு முன்னர் ஸ்டாலின் ஒரு திருமண நிகழ்ச்சிக்கு சென்று அங்கு இந்து திருமண சடங்குகளையும், இந்து திருமணத்தின் போது கூறப்படும் மந்திரங்களையும் கேவலப்படுத்திப் பேசினார். அதே போல் ஸ்டாலின் மேடையில் இருக்கும் போதே கலையரசி நடராஜன் என்பவர் "இந்து என்றாலே எரிகிறது" என்று தெரிவிக்கும் போது அதற்கு எந்த ஒரு எதிர்ப்பும் தெரிவிக்காத ஸ்டாலின் மேடையில் அமர்ந்து சிரித்து ரசித்து கொண்டிருந்தார்.

அதேபோல் மற்ற மதத்தினரின் பண்டிகைகளுக்கு வாழ்த்து தெரிவிப்பது ஆனால் இந்து பண்டிகைகளுக்கு மட்டும் விடுமுறை தின நிகழ்ச்சிகள் என்று தங்கள் டிவி சேனல்களில் ஒளி பரப்புவது என்று இந்து எதிர்ப்பு செயல்களில் மட்டுமே திமுக ஈடுபட்டு வருகிறது.

திருச்சி ஸ்ரீ ரங்கத்தில் நெற்றியில் திலகம் இட்ட போது அதை தன் கையால் அழித்தும் தனக்கு வழங்கப்பட்ட விபூதியை கீழே போட்டும் அவமானப்படுத்தினர். இவர் இப்படி என்றால் இவர் மனைவி இவர் முதல்வராக வேண்டும் என கோவில் கோவிலாக போய் பிரார்த்தனை செய்து வருகிறார்.


கடவுள் இல்லை என்று கூறட்டும் அது அவர்களின் உரிமை. ஆனால் கடவுள் இல்லை என்று கூறிக் கொண்டு மற்ற மத கடவுள்களை உயர்த்திப் பேசியும் இந்துக் கடவுள்களை இழிவுபடுத்தி பேசுவதையும் வழக்கமாகக் கொண்டிருப்பவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன். நான் ஒரு கிறிஸ்தவன் என்று பல மேடைகளில் தெரிவித்த அவர் எதற்காக இந்து கடவுள்களை மட்டும் கொச்சைப்படுத்த வேண்டும். இதுதான் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரின் மதசார்பின்மையா என்று பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்


ஓங்கி உயர்ந்த கட்டிடமாக இருந்தால் அது சர்ச்சு என்றும், கூம்பு வடிவத்தில் இருந்தால் அது மசூதி என்றும், அசிங்கமான பொம்மைகள் இருந்தால் அது கோவில் என்றும் ஒரு கூட்டத்தில் அவர் பேசி இருந்தார். ஆனால் இதையே பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த ஒருவர் மற்ற மதத்தினரை பற்றி இவ்வாறு தெரிவித்து இருந்தால் அவரின் நிலையை யோசித்து பாருங்கள். இவ்வாறு இவர்களின் இந்து விரோதச் செயல்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்லும்.

இப்படி இவர்கள் காலம் முழுவதும் பேசிவிட்டு தற்போது தேர்தல் வந்துவிட்டதால் பொது மேடைகளில் தி.மு.க இந்து விரோத கட்சி அல்ல, தி.மு.க.வில் அநேகம்பேர் இந்துக்கள் என நாக்கு கூசாமல் பேசி சமாளித்து வருகின்றனர். இதற்கு எல்லாம் யாரை குற்றம் சொல்ல வேண்டும் தெரியுமா? தி.மு.க இவ்வளவு செய்ததையும் பொறுத்துக்கொண்டு தி.மு.க.வில் இருக்கும் இந்துக்களையும் தி.மு.க.விற்கு வாக்களிக்கும் இந்துக்களையும் தான் குற்றம் சொல்ல வேண்டும்

Next Story
கதிர் தொகுப்பு
Trending News