Kathir News
Begin typing your search above and press return to search.

இந்துக்கள் சூரியனையும் பசுக்களையும் வழிபடக் கூடாது - நாகை வேட்பாளரின் உண்மை முகம்!

இந்துக்கள் சூரியனையும் பசுக்களையும் வழிபடக் கூடாது - நாகை வேட்பாளரின் உண்மை முகம்!

Yendhizhai KrishnanBy : Yendhizhai Krishnan

  |  3 April 2021 3:12 AM GMT

திமுகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் இந்து விரோதப் போக்கு கொண்டவை என்பது அனைவரும் அறிந்ததே. விசிக தலைவர் திருமாவளவன் "சனாதனத்தை வேரறுப்போம்" என்ற பெயரில் மாநாடு நடத்தி இந்து மதத்தை அழிக்க உறுதி பூண்டது குறிப்பிடத்தக்கது.

இதில் திமுக தலைவர் ஸ்டாலினும் கலந்து கொண்டார்‌ என்பதையும் மறந்து விடக் கூடாது. இந்தத் தேர்தலில் தீவிர இந்து விரோத மனப்பான்மைக்கும் செயல்களுக்கும் பரிசளிக்கும் வகையில் திமுகவும் சரி அதன் கூட்டணிக் கட்சிகளும் சரி சிலருக்கு போட்டியிட வாய்ப்பளித்துள்ளன.

சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் எழிலன் இந்து கடவுள்களை இழிவுபடுத்தி பேசியது சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது. அதே அளவு இந்து விரோத போக்கு கொண்ட வி.சி.க.வைச் சேர்ந்த ஆளூர் ஷாநவாசும் இந்த தேர்தலில் போட்டியிடுகிறார்.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் போட்டியிடும் இவர் "இந்துக்கள் சூரியனையும் பசுவையும் வணங்கி பொங்கல் கொண்டாடுவது இஸ்லாமியர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் சங்கடமாக இருப்பதாகவும் எனவே இந்து சடங்குகளை கைவிட்டு சூரியனையும் பசுவையும் உள்ளிட்டவற்றை வணங்காமல் இந்துக்கள் பொங்கல் கொண்டாடினால் தமிழர்கள் என்றும் தமிழ் பண்டிகை என்றும் தாங்களும் பொங்கல் பண்டிகையை கொண்டாட ஏதுவாக இருக்கும்" என்று முன்னர் பேசியிருந்தார்.

இந்துக்கள் பொங்கலன்று சூரியனையும் பசுவையும் வழிபடுவதால் 'ஏக இறைவன்' என்ற கோட்பாட்டைப் பின்பற்றும் ஆபிரகாமிய மதங்களை சேர்ந்தவர்களுக்கு பொங்கலை தமிழர் பண்டிகை என்று ஏற்றுக் கொள்வது கடினமாக இருக்கிறது என்றும் அவர் தெரிவித்திருந்தார். எனவே இந்த வழக்கமும் இந்து சடங்குகளும் பொங்கலில் இருந்து விலக்கப்பட வேண்டும் என்றும் இல்லையென்றால் அது தமிழர்களின் ஒற்றுமைக்கு பங்கம் விளைவிக்கும் என்றும் எச்சரித்திருந்தார்.

இந்துக்கள் தங்கள் பண்டிகை எப்படி கொண்டாடினால் இவருக்கு என்ன என்ற கேள்வி உங்கள் மனதில் எழலாம். இஸ்லாமியர்களும் இந்துக்களை போன்றே திறந்தவெளியில் பொங்கல் வைப்பது தான் இவரது பிரச்சனை. ஏனென்றால் சூரிய பகவானை வழிபடும் நோக்கிலேயே இந்துக்கள் திறந்தவெளியில் பொங்கல் வைப்பர்.

இந்த தாத்பரியத்தை அறியாமல் இஸ்லாமியர்கள் இந்த வழக்கத்தை பின்பற்றுவதாக ஷாநவாஸ் வேதனையுடன் கூறுகிறார். மேலும் அல்லாஹ்வால் படைக்கப்பட்ட ஒன்றை வழிபடுவதால் அல்லாஹ்வின் கோபத்திற்கு ஆளாக நேரிடும் என்று அச்சுறுத்தவும் செய்கிறார்.

இப்படி எல்லாம் பேசியும் இஸ்லாமியர்கள் பொங்கல் கொண்டாடுவதை கை விடாததால் இந்துக்களின் பண்டிகையான பொங்கலை தமிழர் பண்டிகை என்று கூறி மதச்சார்பற்ற ஒரு விஷயமாகும் இந்து மதத்திலிருந்து பிரிக்கவும் எடுத்த முயற்சியில்தான் இந்த சடங்குகளை பின்பற்றாமல் பொங்கல் கொண்டாட வேண்டும் என்று இந்துக்களுக்கு கட்டளையிட்டிருக்கிறார்.








இப்படிப்பட்ட பின்னணி கொண்ட இவர் இப்போது தேர்தலுக்கு வாக்கு சேகரிக்க கோவில்களுக்கு சென்று வழிபடுவது போல் நடிப்பது மட்டுமின்றி திருநீறு, குங்குமம் பிரசாதத்தையும் அணிந்து கொள்கிறார். ஆனால் இதைப் பார்த்த மக்கள் இவர் மதச்சார்பற்ற அவர் என்று எண்ணி ஏமாந்து விடக்கூடாது. இஸ்லாமிய மத கோட்பாட்டில் அல்-தக்கியா என்ற ஒரு விஷயம் இருக்கிறது. தங்கள் மத கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு பொய் சொல்லலாம் என்பதே அது.


தீவிர இந்து வெறுப்பு கொண்டவரான ஆளூர் ஷாநவாஸ் வாக்கு கேட்டு கோவில்களுக்கு செல்வதும் இந்த அல்-தக்கியாவிலேயே அடங்கும். அன்னை காவேரி குடகு மலையில் தோன்றி அலுத்து சலித்து ஓடிக் களைத்து கடலில் கலக்கும் நாகை மாவட்டத்தில் அன்னையின் கரையை ஒட்டி பெருமளவில் சிவாலயங்களும் வைஷ்ணவ தலங்களும் அமைந்துள்ளன.

இவற்றில் பெரும்பாலானவை பாடல்பெற்ற, மங்களாசாசனம் செய்யப்பட்ட தலங்களும் கூட. இப்படிப்பட்ட புண்ணிய பூமியில் வாழும் மக்கள் இன்று விரோதிகளின் சதியை உணர்ந்து அவர்களை இந்தத் தேர்தலில் தோற்கடிக்க வேண்டும்.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News