கோவில் அடிமை நிறுத்து இயக்கத்திற்கு மேலும் ஒரு சுவாமிகள் ஆதரவு!
By : Shiva
'கோவில் அடிமையை நிறுத்து' என்ற இணையதள பிரச்சாரத்திற்கு ஆதரவாக பல்வேறு தரப்பு மக்கள் தங்களின் ஆதரவை தெரிவித்து வந்த நிலையில் தற்போது காஞ்சி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளும் தனது ஆதரவினை தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் இந்து கோவில்கள் அனைத்தும் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. கோவிலை பராமரிக்க வேண்டிய அறநிலையத்துறை தங்களது கடமைகளை சரிவர செய்யாமல் இருப்பதன் காரணமாக தற்போது தமிழகத்தில் உள்ள கோவில்கள் பெரும்பான்மையானவை அழிந்து வரும் சூழ்நிலையில் இருந்து வருகிறது.
எனவே கோவில்களை உடனடியாக பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் சத்குரு ஜக்கி வாசுதேவ் கோவில் அடிமை நிறுத்து என்ற இணையதள பிரச்சாரத்தை மேற்கொண்டார். இதற்கு பல்வேறு தரப்பு பொதுமக்கள் தங்களின் ஆதரவை தெரிவித்து வந்த நிலையில் தற்போது காஞ்சி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளும் தனது ஆதரவை நிலைப்பாட்டினை வெளி கொண்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் தெரிவிக்கையில் "மனிதனை நல்வழிப்படுத்துவதற்கான கேந்திரங்களாக கோவில் இருந்து வருகிறது. கோவில் கட்டுவதற்கு இடங்கள் தேர்வு செய்வதில் இருந்து சூரியன் சந்திரன் இருக்கும் வரை கோவிலில் உள்ள விக்ரகங்கள் சக்தியுடன் விளங்க வேண்டும் என்பதற்காக நமது முன்னோர்கள் மிகவும் அக்கறையுடன் கோவிலை கட்டியுள்ளனர்.
64 கலைகளையும் வளர்க்கும் இடமாகவும், தினசரி பூஜைகள், 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் என சிறப்பு வாய்ந்த இடங்களாக கோவில்கள் விளங்கி வருகின்றன. நமது முன்னோர்கள் கோவிலுக்கு பல்வேறு தானங்கள் வழங்கியுள்ளனர். தீபம் ஏற்றுவதற்கு கூட தனி தானங்கள் வழங்கப்பட்டுள்ளது. தீர்த்தங்கள், தல விருட்சங்கள் என இயற்கையையும், பஞ்ச பூதங்களையும் போற்றும் மதம் ஹிந்து மதம் என்றும் இவ்வளவு சிறப்புமிக்க இந்துக்கள் கட்டிய கோவில்களை நாம் வளர்த்து இருக்க வேண்டும்" என்றும் அவர் தெரிவித்தார்.
எனவே ஜக்கி வாசுதேவ் தொடங்கியுள்ள இந்த கோவில் அடிமை நிறுத்து என்ற பிரச்சாரத்திற்கு தனது ஆதரவை தெரிவித்துக் கொள்வதாக அவர் அறிவித்தார். மேலும் இந்த பிரசாரத்தில் பொதுமக்களும் தங்களின் ஆதரவை தெரிவித்து ஒத்துழைப்பு தர வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.