Kathir News
Begin typing your search above and press return to search.

வருட வருமானத்திலேயே வஞ்சகம் வைத்த சீமான்! ரூ.1000 சம்பாத்தியத்தில் 8,97,557 ரூபாய் கடனை அடைத்த பலே கில்லாடி!

வருட வருமானத்திலேயே வஞ்சகம் வைத்த சீமான்! ரூ.1000 சம்பாத்தியத்தில் 8,97,557 ரூபாய் கடனை அடைத்த பலே கில்லாடி!

MuruganandhamBy : Muruganandham

  |  18 March 2021 1:49 AM GMT

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வேட்பு மனுவுடன் தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரத்தில், 2019 - 20-ஆம் நிதியாண்டில் சீமானின் ஆண்டு வருமானம் ரூ.1000 என்று எழுதப்பட்டிருந்தது. இது பல்வேறு சர்ச்சையை ஏற்படுத்தியது.

ஒரு அரசியல் கட்சின் தலைவராக செயல்படுபவரின் ஆண்டு வருமானமே ரூ.1000 என்றால் எப்படி? என்று பல்வேறு கேள்விகளும் எழுந்தன. இந்த நிலையில், அது உண்மையல்ல என்றும், எழுத்துப்பிழை என்றும் சீமான் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

தற்போது, சீமானின் ஆண்டு வருமானம் 2 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் எனவும், அதற்கான அவர் செலுத்திய வரி தொகை ரூ.1,000 என்பதும் தெரியவந்தது. எப்படியோ தவறாக வருமானம் ரூ.1000 என பதிவிடப்பட்டதாக சீமான் தரப்பிலிருந்து விளக்கமளிக்கப்பட்டது

இந்த சூழலில்தான் சீமானின் கடன் குறித்த சர்ச்சை புதிதாக முன்வைக்கப்படுகிறது. கடந்த 2016 ஆம் ஆண்டு தேர்தல் தாக்கல் செய்திருந்த பிரமாணப்பத்திரத்தில் 8,97,557 ரூபாய் ICICI வங்கியில் கடன் இருப்பதாக தெரிவித்து உள்ளார். ஆனால் 2021இல் பிரமாணப்பத்திரத்தில் கடன் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2019-20 ஆம் ஆண்டில் ஆண்டு வருமானம் ரூ.1000 மட்டுமே என்று தெரிவித்த சீமான், அதனை வைத்து எப்படி 8,97,557 ரூபாய் கடனை அடைத்திருக்க முடியும் என்ற சந்தேகம் எழுகிறது.

தேர்தல் ஆணையத்தின் தரப்பில், சீமான் குறிப்பிட்ட தகவல்களின் உண்மை தன்மை சோதிக்கப்பட வேண்டுமென கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News