இந்தியா - ஐரோப்பிய யூனியன் பிட்டா!! விலை குறையும் பொருட்கள்!!

By : Bharathi Latha
இந்தியா மற்றும் ஐரோப்பிய யூனியன் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தை நடத்தி முடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் ஒப்பந்தம் இந்த ஆண்டே கையெழுத்தாகும் என கூறினார்.
இந்த ஒப்பந்தத்தால், மெர்சிடிஸ், ஆடி, பி.எம்.டபிள்யூ கார்களுக்கான இறக்குமதி வரி 40% ஆக குறையும். இதனால், இத்தகைய கார்களின் விலை கணிசமாகக் குறையும்.
பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின் போன்ற ஐரோப்பிய சந்தைகளில் இருந்து இறக்குமதியாகும் ஒயினின் விலை குறையும். இந்தியா தற்போது 150% வரி விதிக்கிறது. புதிய ஒப்பந்த்தின்படி, இந்த வரி 20% ஆக குறைக்கப்படும்.
ஐரோப்பாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் விமான உதிரி பாகங்கள், மொபைல் போன்கள், உயர் தொழில்நுட்ப மின்னணு பொருட்கள் ஆகியவற்றின் விலை கணிசமாகக் குறையும், மேலும் இந்தியாவில் தயாரிக்கப்படும் ஆடை, தோல் மற்றும் நகைகள் ஐரோப்பிய சந்தை செல்லும் என கூறப்பட்டது.
