Kathir News
Begin typing your search above and press return to search.

ஐ.பெரியசாமி சொத்துக் குவிப்பு வழக்கு!! உச்ச நீதிமன்றம் மேல்முறையீடு தள்ளுபடி!!

ஐ.பெரியசாமி சொத்துக் குவிப்பு வழக்கு!! உச்ச நீதிமன்றம் மேல்முறையீடு தள்ளுபடி!!
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  28 Jan 2026 8:38 PM IST

தமிழக அமைச்சர் ஐ.பெரியசாமி மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றம் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்துள்ளது. 2006-2011 காலகட்டத்தில் வீட்டு வசதித்துறை அமைச்சராக இருந்த போது வருமானத்துக்கு அதிகமாக ரூ.2 கோடியே 1 லட்சத்து 35 ஆயிரம் அளவுக்கு சொத்து சேர்த்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.


2012-ம் ஆண்டு லஞ்ச ஒழிப்பு காவல்துறை வழக்கு பதிவு செய்தது. திண்டுக்கல் மாவட்ட ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் ஐ.பெரியசாமி உள்ளிட்ட 4 பேரையும் விடுவித்து தீர்ப்பளித்தது. ஆனால், சென்னை உயர் நீதிமன்றம் 2025-ம் ஆண்டு ஏப்ரல் 28-ம் தேதி அந்த உத்தரவை ரத்து செய்தது.


இதனை எதிர்த்து ஐ.பெரியசாமி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதனால், அமலாக்கத்துறை நோட்டீஸ்க்கு எதிரான வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. 2 மாதங்கலில் சட்டமன்ற தேர்தல் நடக்க உள்ள நிலையில் இந்த வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டிருப்பதால் திமுகவை நோக்கி கேள்விகள் எழுப்பப்பட்டு வருகிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News