Kathir News
Begin typing your search above and press return to search.

இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தத்தில் முக்கிய அறிவிப்புகள்!!

இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தத்தில் முக்கிய அறிவிப்புகள்!!
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  9 Feb 2026 2:13 PM IST

இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்திருந்தார். அதன்படி, இந்தியா மீதான பரஸ்பர வரியை 25% லிருந்து 18% ஆகக் குறைத்தது அமெரிக்கா.


அமெரிக்காவிடம் சுமார் ₹42 லட்சம் கோடி மதிப்பிலான கொள்முதல் செய்யப்படும் என பிரதமர் மோடி அறிவித்தார். வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல், இந்தியா அமெரிக்காவுக்கு எந்த முதலீட்டு உறுதிமொழியும் அளிக்கவில்லை எனத் தெரிவித்தார்.


அடுத்த 5 ஆண்டுகளில் அமெரிக்காவிலிருந்து சுமார் 500 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்களை இந்தியா இறக்குமதி செய்யலாம் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இதில் விமானங்கள் மட்டும் 70-80 பில்லியன் டாலர் அளவுக்கு இருக்கும்.


சட்டப்பூர்வமான ஒப்பந்தம் மார்ச் மாத நடுப்பகுதியில் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கிறோம். இந்த ஒப்பந்தம் இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு பெரிய வாய்ப்புகளைத் திறக்கும். விவசாயிகள், MSME, மீனவர்களுக்கு பயனளிப்பதாக பியூஷ் கோயல் கூறினார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News