Kathir News
Begin typing your search above and press return to search.

பக்கா பிளான் இருக்கு! பாரிஸ் ஒப்பந்தத்தின் இலக்குகளை 2030-க்கு முன்னதாகவே எட்டப்போகும் இந்தியா!

பக்கா பிளான் இருக்கு! பாரிஸ் ஒப்பந்தத்தின் இலக்குகளை 2030-க்கு முன்னதாகவே எட்டப்போகும் இந்தியா!

MuruganandhamBy : Muruganandham

  |  7 March 2021 2:00 AM GMT

இந்தியாவில் மார்ச் 2021 வரை 37 மில்லியன் எல்ஈடி விளக்குகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் மூலம் மக்களின் மின் செலவு குறைந்திருப்பதோடு, ஒரு வருடத்திற்கு 38 மில்லியனுக்கும் அதிகமான கரியமில வாயு குறைகிறது.

"கிவ் இட் அப்" இயக்கத்தின் கீழ் இந்தியா முழுவதும் பலர் தங்களது சமையல் எரிவாயு மானியத்தை விட்டுக்கொண்டுத்தனர். இதன் மூலம் லட்சக்கணக்கான வீடுகளுக்கு புகையில்லா சமையல் அறைகள் கிடைத்தன. சமையல் எரிவாயுவின் பயன்பாடு 55 சதவீதத்தில் இருந்து 99.6 சதவீதமாக இன்றைக்கு அதிகரித்துள்ளது. பெண்களுக்கு நன்மை கிடைத்துள்ளது.

குறைந்த செலவு போக்குவரத்துக்கு முன்முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்தியா குப்பையில் இருந்து வளத்தை உருவாக்கி வருகிறது . 15 மில்லியன் மெட்ரிக் டன்கள் உற்பத்தி இலக்கோடு 5000 அழுத்தமூட்டப்பட்ட உயிரி எரிவாயு மையங்கள் 2024-க்குள் நிறுவப்பட உள்ளது.

கூடவே எத்தனால் பயன்பாடு இந்தியா முழுவதும் அதிகரித்து வருகிறது. மக்களின் வரவேற்பை தொடர்ந்து, 2025-க்குள் 20 சதவீத எத்தனால் கலப்பை பெட்ரோலில் நாம் அடையவிருக்கிறோம். முன்னர் இது 2030 இலக்காக இருந்தது. பாரிஸ் ஒப்பந்தத்தின் இலக்குகளை 2030-க்கு முன்னதாகவே நாம் அடைந்துவிடுவோம்.

சுற்றுச்சூழல் மாற்றங்களில் ஒத்த கருத்துள்ள நாடுகளுடன் இணைந்து பணியாற்ற இந்தியா விரும்புகிறது. சர்வதேச சூரிய சக்தி கூட்டணியின் ஆரம்ப வெற்றி பூமியை சிறப்பான இடமாக மாற்றுவதற்கான இந்தியாவின் உறுதியை பறைசாற்றுகிறது.

மரபு சாரா எரிசக்தி ஆதாரங்களின் பங்கு இந்தியாவில் 38 சதவீதமாக உயர்ந்துள்ளது, பாரத்-6 மாசு விதிகளை அமல்படுத்தப்பட்டுள்ளது. தேசிய ஹைட்ரஜன் இயக்கத்தை அறிமுகப்படுத்தியுள்ளனர்.

பிரதமர் சூரியசக்தி பம்பு திட்டத்தை சமீபத்தில் செயல்படுத்தப்பட்டுள்ளது. 2030-ம் ஆண்டுக்குள் இயற்கை எரிவாயுவின் பங்கை தற்போதைய 6 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக உயர்த்துவதற்காக இந்தியா பணியாற்றி வருகிறது.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News