Kathir News
Begin typing your search above and press return to search.

முதலமைச்சர் கொரோனா நிவாரண நிதிக்கு 25 லட்சம் வழங்கிய காஞ்சி ஸ்ரீ சங்கர மடம்!

முதலமைச்சர் கொரோனா நிவாரண நிதிக்கு 25 லட்சம் வழங்கிய காஞ்சி ஸ்ரீ சங்கர மடம்!

ShivaBy : Shiva

  |  20 May 2021 1:01 AM GMT

காஞ்சி ஸ்ரீ சங்கர மடம் சார்பாக முதலமைச்சரின் கொரோனா நிவாரண நிதிக்கு 25 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.





தமிழகத்தில் கொரோனா தோற்று மிகவும் வேகமாக பரவி வருகிறது. மாநிலத்தில் பல்வேறு மாவட்டத்தில் தொற்று எண்ணிக்கை தினமும் உயர்ந்து கொண்டே வருகிறது. பல்வேறு மருத்துவமனைகளில் படுக்கை வசதி இல்லாததால் மக்கள் ஆம்புலன்ஸ்லேயே காத்திருக்கும் அவல நிலையும் ஏற்பட்டுள்ளது. மேலும் மாநிலத்தில் பல்வேறு இடங்களில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

இதனால் ஏற்பட்டுள்ள குறைபாடுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு நிவாரண நிதிக்கு பொதுமக்கள் நிதி அளித்து வருகின்றனர். இன்று காஞ்சி ஸ்ரீ சங்கர மடம் சார்பாக முதலமைச்சர் கொரோனா நிவாரண நிதிக்கு

₹ 25லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து காஞ்சிபுரம் சங்கரமடம் சார்பாக செய்திக்குறிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் "கொரோனா தொற்றுநோயால் ஏற்பட்டுள்ள அசாதாரணமான சூழ்நிலையில் தமிழக முதலமைச்சருடைய கோரிக்கையினை ஏற்று காஞ்சி ஸ்ரீ காமகோடி பீடம் சங்கர மடம் சார்பில் ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம் அறக்கட்டளையின் மூலமாக ரூபாய் ₹ 25 லட்சத்தை 19.05.21 அன்று வழங்கினார்.

அதனை காஞ்சி காமகோடி பீடம் மேலாளர் என்.சுந்தரேசன், அறக்கட்டளை அறங்காவலர் டி.எஸ்.ராகவன், டி.ஆர்.ராஜகோபாலன், பம்மல் விஸ்வநாதன், ஆகியோர் தலைமை செயலகத்தில் மாண்புமிகு தமிழக முதலமைச்சரை நேரில் சந்தித்து. இந்த தொற்று நோய் விரைவில் அகலவும், இயல்புநிலை திரும்பவும் ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் உடைய பிரார்த்தனையும் அருளாசியும் முதலமைச்சரிடம் தெரிவிக்கப்பட்டது" என்று செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News