உச்சபட்ச சாதனை! இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களின் எண்ணிக்கை 3 கோடியை நெருங்கியது!

By : Muruganandham
ஜனவரி 16-ஆம் தேதி நாடு முழுவதும் தொடங்கப்பட்ட கொரோனா தடுப்பூசி வழங்கும் திட்டத்தில் இந்தியா குறிப்பிடத்தக்க மைல்கல் சாதனையை படைத்துள்ளது.
தடுப்பூசி வழங்கும் திட்டத்தின் 56-ஆம் நாளில் 30,561 முகாம்களில் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் வழங்கப்பட்டன. ஒரு நாளில் இதுவரை செலுத்தப்பட்டுள்ள தடுப்பூசிகளின் எண்ணிக்கையில் இது மிகவும் அதிகமாகும்.
கடந்த 24 மணி நேரத்தில், 26,291 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது. இவர்களில் 78.41 சதவீதம் பேர் மேற்கண்ட 5 மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவில் அதிகபட்சமாக 16,620 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது. கேரளாவில் 1,792 பேருக்கும், பஞ்சாப்பில் 1,492 பேருக்கும் புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா சிகிச்சை பெறுபவர்களின் மொத்த எண்ணிக்கை 2,19,262ஆகும். மற்றொருபுறம், இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களின் எண்ணிக்கை 3 கோடியை நெருங்கியுள்ளது.
இன்று காலை 7 மணி வரை 2,99,08,038 பேர் கொரோனா தடுப்பூசி போட்டுள்ளனர். 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 82,92,193 பேர் கொரோனா தடுப்பூசி போட்டுள்ளனர்.
இந்தியாவில் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,10,07,352-ஆக உள்ளது. குணமடைந்தோர் வீதம் 96.68 சதவீதமாகும். கடந்த 24 மணி நேரத்தில் 17,455 பேர் குணமடைந்துள்ளனர். 118 பேர் உயிரிழந்துள்ளனர்.
