Kathir News
Begin typing your search above and press return to search.

இந்த இரு மாநிலங்களுக்கு மட்டும் 3000 மெட்ரிக் டன் ஆக்சிஜனை கொண்டுவந்து சேர்த்த ரயில்வே துறை..!

இந்த இரு மாநிலங்களுக்கு மட்டும் 3000 மெட்ரிக் டன் ஆக்சிஜனை கொண்டுவந்து சேர்த்த ரயில்வே துறை..!
X

ShivaBy : Shiva

  |  6 Jun 2021 7:41 PM IST

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை பரவத் தொடங்கியதில் இருந்தே நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டது. ஆக்சிஜனை உற்பத்தி செய்து ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்லும் கடினமான பணியை இந்திய ரயில்வே தனது துரிதமான நடவடிக்கையின் மூலம் மேற்கொண்டது.


தமிழகம் மற்றும் கர்நாடகா மாநிலத்திற்கு மட்டும் 3000 மெட்ரிக் டன்னுக்கும் மேற்பட்ட மருத்துவ திரவ ஆக்சிஜனை இந்திய ரயில்வே கொண்டுவந்து சேர்த்துள்ளது. இந்தியா முழுவதும் இதுவரை 2600 மெட்ரிக் டன்னுக்கும் அதிகமான திரவ மருத்துவ ஆக்சிஜனை ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் கொண்டு சேர்த்துள்ளன. இந்திய ரயில்வே மூலம் இதுவரை 1,534 டேங்கர்களில் 26,281 மெட்ரிக் டன் ஆக்சிஜன் தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு 376 ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் மூலம் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.

தற்போது மேலும் 26 டேங்கர்களில் சுமார் 483 மெட்ரிக் டன்னை ஏற்றிக் கொண்டு ஆக்சிஜன் 6 ரயில்கள் பயணித்துக் கொண்டிருக்கின்றன. தென் மாநிலங்களான தமிழ்நாடு மற்றும் கர்நாடகா கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது காரணமாக ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்களின் மூலம் தலா 3,000 மெட்ரிக் டன்னுக்கும் மேல் திரவ மருத்துவ ஆக்சிஜனை பெற்றுள்ளன என்று ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய ரயில்வே மூலம் தமிழ்நாடு, உத்தரகண்ட், கர்நாடகா, மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், ஆந்திரப் பிரதேசம், ராஜஸ்தான், ஹரியானா, தெலங்கானா, பஞ்சாப், கேரளா, தில்லி, உத்தரப் பிரதேசம், ஜார்கண்ட், அசாம் ஆகிய 15 மாநிலங்கள் இதுவரை ஆக்சிஜனைப் பெற்றுள்ளன. கூடுதலாக சில ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் இன்று இரவு தங்களது பயணத்தைத் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நாட்டில் நிலவும் ஆக்சிஜன் பற்றாக்குறையை போக்குவதற்கு ஆக்சிஜனை கொண்டு செல்வது முக்கிய பணியாக இருந்த நிலையில், இந்திய ரயில்வே மேற்கொண்ட துரித நடவடிக்கையின் மூலம் குறிப்பிட்ட நேரத்தில் நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் ஆக்சிஜனைக் கொண்டு சேர்த்துள்ளதாக இந்திய ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News