நாங்க 3.5% அல்ல 35% என்று மிரட்டல் விடுத்த மதபோதகர்- சமூக வலைதளங்களில் பரபரப்பு!
By : Shiva
அரசு அளிக்கும் சலுகைகளுக்காக கிறிஸ்தவர்களாக மதம் மாறி தங்களை கிறிஸ்தவர்கள் என்று அடையாளப்படுத்திக் கொள்ளாதவர்கள் இனி தைரியமாக வந்து கிறிஸ்தவர்கள் என்று அடையாளப்படுத்திக் கொண்டு கிறிஸ்தவர்களின் பலத்தை நிரூபிக்க வேண்டும் என்று மத போதகர் ஒருவர் ஆக்ரோஷமாக தெரிவித்திருப்பது சமூக வலைதளங்களில் வேகமாக பரப்பப்பட்டு வருகிறது.
இந்து மதத்திலிருந்து கிறிஸ்துவ மதத்திற்கு மதம் மாறியவர்கள் இந்து மதத்தில் இருக்கும் இட ஒதுக்கீட்டை பயன்படுத்தி வேலைவாய்ப்பு மற்றும் இதர சலுகைகளை அனுபவித்துக் கொண்டு இந்து கடவுள்களை இழிவாக பேசி வருவதை நாம் நன்கு அறிவோம். இதனை தற்போது மத போதகர் ஒருவர் வெளிப்படையாக தெரிவித்துள்ளது சமூக வலைதளங்களில் வேகமாக பரப்பப்பட்டு வருகிறது.
அதில் அவர் 'அனைத்து சலுகைகளையும் வேலை வாய்ப்புகளையும் தூக்கி எறிந்துவிட்டு, வெளியே வந்து உங்களை கிறிஸ்தவர்களாக அறிவித்துக் கொள்ளுங்கள்.அரசாங்கம் சொல்வது போல் இந்திய நாட்டில் கிறிஸ்தவர்கள் 3.5% இல்லை என்றும் உண்மையில் 35% இருக்கிறார்கள்' என்றும் அவர் உணர்ச்சிபூர்வமான பேசியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரப்பப்பட்டு வருகிறது.
ஆந்திராவின் எம்.பி ராமகிருஷ்ண ராஜு என்பவர் ஆந்திராவில் 2.5% கிறிஸ்தவ மக்கள் இல்லை என்றும் அவர்களின் உண்மையான எண்ணிக்கை 25% இருக்கும் என்றும் தொலைக்காட்சி நேரலையில் தெரிவித்து அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாகினர். இதேபோல் தற்போது தமிழகத்திலும் கிறிஸ்தவ மத போதகர் ஒருவர் 35 சதவீத கிறிஸ்தவ மக்கள் இருப்பதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம் அமைப்புகள் ஒன்று கூடி தங்கள் மதத்திற்கு யார் ஆதரவு தருகிறார்களோ அவர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்று அனைத்து பொதுக்கூட்டங்களிலும் தெரிவித்துவரும் நிலையில் இந்துக்களும் இதே போல் ஒற்றுமையை வெளிப்படுத்தி இந்து விரோத கட்சிகளுக்கு வாக்களிக்க மாட்டோம் என்ற நிலைப்பாட்டை வெளிப்படுத்தினால் இந்து விரோத கட்சிகள் தமிழ்நாட்டில் மீண்டும் ஆட்சி கட்டிலில் அமர்வதை கனவில் கூட நினைத்து பார்க்க முடியாத நிலை ஏற்படும் என்று சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் பதிவு செய்து வருகின்றனர்.