Kathir News
Begin typing your search above and press return to search.

அரசு மருத்துவர்களுக்கு நீதி!! அரசாணை 354 நடைமுறைப்படுத்த வேண்டும்!!

அரசு மருத்துவர்களுக்கு நீதி!! அரசாணை 354 நடைமுறைப்படுத்த வேண்டும்!!
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  5 Feb 2026 5:46 PM IST

அரசு மருத்துவர்கள் சட்டப் போராட்டக் குழு, தமிழக முதல்வருக்கு அரசாணை 354-ஐ நடைமுறைப்படுத்துமாறு வேண்டுகோள் விடுத்து கோரிக்கை முன்வைத்துள்ளது.


2009-ம் ஆண்டு முன்னாள் முதல்வர் கருணாநிதி அரசாணை 354 ன் மூலம், அரசு மருத்துவர்களுக்கு DACP எனப்படும் காலம் சார்ந்த ஊதியம் கிடைத்திட வழி வகுத்தார். ஆனால் அந்த அரசாணை நீண்டகாலமாக கிடப்பில் போடப்பட்டுள்ளது.


அரசு மருத்துவர்களுக்கு தரப்படும் ஊதியம் மட்டும் 15 ஆண்டுகள் பின்தங்கி உள்ளது என்பது தான் வருத்தமான உண்மை. மற்ற மாநிலங்களில் எம்பிபிஎஸ் மருத்துவர்களுக்கு தரப்படும் ஊதியத்தை விட ரூ.40000 குறைவாக இங்குள்ள எம்பிபிஎஸ், சிறப்பு மற்றும் உயர் சிறப்பு மருத்துவர்களுக்கு ஊதியம் தரப்படுகிறது.


இன்று நடைபெறும் தமிழக அமைச்சரவை கூட்டத்தில், அரசு மருத்துவர்களுக்கு 12 ஆண்டுகளில் ஊதியப்பட்டை நான்கு வழங்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட வேண்டும் என கோரிக்கை விடுக்கிறோம்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News