தி.மு.க பிரச்சார கூட்டத்தில் மாயமான 5 சவரன் தங்கசங்கிலி! எப்படியோ பொதுமக்கள் ஒருவர் கண்ணில் பட்டதால் தப்பித்தது!

By : Muruganandham
சென்னையில் திமுக பிரச்சாரக்கூட்டத்தில் ஆட்டம் போட்ட தொண்டரின் கழுத்தில் கிடந்த 5 சவரன் தங்கசங்கிலி மாயமான நிலையில் மீண்டும் கிடைத்த அதிசய சம்பவம் நிகழ்ந்திருக்கிறது. சென்னை ஆர்.கே நகரின் திமுக வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்க வந்த உதய நிதி ஸ்டாலினை வரவேற்கும் விதமாக, திமுக தேர்தல் பாடல் இசைக்கப்பட்டது.
அப்போது அங்கு கூடியிருந்த தொண்டர்கள் போதையில் நடனமாடினார். கூடவே பெண் தொண்டர்களும் உற்சாகமாக ஆடிக் கொண்டிருந்தனர். குடிபோதையில் ஆட்டம் போட்ட தொண்டரின் கழுத்தில் கிடந்த 5 சவரன் தங்க சங்கிலி , கழுத்தில் இருந்து கழண்டு விழுந்த நிலையில் அதனை கவனிக்காமல் தொடர்ந்து ஆடிக்கொண்டிருந்தார்.
இதனை கவனித்த பொதுமக்களில் ஒருவர் அந்த தங்க சங்கிலியை எடுத்து பத்திரமாக உரியவரின் கொடுத்த போது தான், தன்னுடைய கழுத்தில் தங்க சங்கிலி இல்லாததையே திமுக தொண்டர் உணர்ந்தார். பொதுவாக திமுக பிரச்சார கூட்டங்களில் ஒரு பொருள் காணாமல் போய்விட்டால் அதனை மறந்துவிட வேண்டும் என்ற மன நிலைக்கு மக்கள் வந்துவிட்டனர்.
அப்படிப்பட்ட சூழ்நிலையில் ஐந்து பவுன் திரும்ப கிடைத்திருப்பது. இந்த ஆண்டின் அதிசய சம்பவமாக வரலாற்றில் பதிவாகியுள்ளது. இதுவே பொதுமக்கள் ஒருவரின் கண்ணில் பட்டதால் 5பவுன் தப்பித்தது. கட்சிகாராங்க யாராவது கண்ணில் சிக்கியிருந்தால் என்னவாயிருக்கும்? என்பது கேள்விக்குறியே.
