Kathir News
Begin typing your search above and press return to search.

அடுத்த 5 ஆண்டுகளில், இந்தியாவில் உற்பத்தி 520 பில்லியன் அமெரிக்க டாலராக அதிகரிக்கும்!

அடுத்த 5 ஆண்டுகளில், இந்தியாவில் உற்பத்தி 520 பில்லியன் அமெரிக்க டாலராக அதிகரிக்கும்!

MuruganandhamBy : Muruganandham

  |  6 March 2021 4:51 AM GMT

அடுத்த 5 ஆண்டுகளில், இந்தியாவில் உற்பத்தி 520 பில்லியன் அமெரிக்க டாலராக அதிகரிக்கும். தகவல் தொழில்நுட்பம் ஹார்டுவேர் மற்றும் தொலை தொடர்பு சாதனங்கள் உற்பத்தி 4 ஆண்டுகளில் 3 டிரில்லியன் ரூபாய் மதிப்பிலான உற்பத்தியை எட்டும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

உள்நாட்டு மதிப்பு கூட்டும், 5 ஆண்டுகளில் தற்போதுள்ள 5-10 சதவீதத்திலிருந்து 20 முதல் 25 சதவீதமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் தொலை தொடர்பு சாதனங்கள் உற்பத்தியும் 5 ஆண்டுகளில் ரூ.2.5 லட்சம் கோடிக்கு அதிகரிக்கும்.

இவற்றிலிருந்து நாம் ரூ. 2 லட்சம் கோடிக்கு ஏற்றுமதி செய்யும் நிலையில் இருக்க முடியும். மருந்து துறையில், அடுத்த 5-6 ஆண்டுகளில், முதலீடு 15,000 கோடிக்கும் மேல் இருக்கும் எனவும், விற்பனை 3 லட்சம் கோடியாகவும், ஏற்றுமதி 2 லட்சம் கோடியாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

உலகம் முழுவதும் இந்தியா மிகப் பெரிய அடையாளமாக மாறிவருகிறது. இந்தியாவின் நம்பகத்தன்மை மற்றும் அடையாளம் தொடர்ந்து புதிய உச்சத்தை அடைந்து வருகிறது.

இந்திய மருந்துகள், மருத்துவ சாதனங்கள், மருத்துவர்கள், மீதான நம்பிக்கை உலகம் முழுவதும் அதிகரித்துள்ளது. இந்தியாவில் செல்போன் மற்றும் எலக்ட்ரானிக் பாகங்களின் உற்பத்தியை ஊக்குவிப்பதற்காக, உற்பத்தியுடன் கூடிய ஊக்குவிப்பு திட்டம் தொடங்கப்பட்டது. தொற்று காலத்தில் கூட, கடந்தாண்டில் இத்துறை ரூ.35,000 கோடி மதிப்பிலான பொருட்களை உற்பத்தி செய்தது.

ரூ.1300 கோடி அளவுக்கு புதிய முதலீடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கான புதிய வேலை வாய்ப்புகளும் உருவாக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு துறையிலும், வழிகாட்டுதல் பிரிவு உருவாக்கப்படுவதன் மூலம், நாட்டின் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் துறையில் உற்பத்தியுடன் கூடிய ஊக்குவிப்பு திட்டம் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News