Kathir News
Begin typing your search above and press return to search.

உலகளாவிய புதுமை கண்டுபிடிப்பு பட்டியலில் முதல் 50 இடங்களுக்குள் இடம்பெற்ற இந்தியா!

உலகளாவிய புதுமை கண்டுபிடிப்பு பட்டியலில் முதல் 50 இடங்களுக்குள் இடம்பெற்ற இந்தியா!

MuruganandhamBy : Muruganandham

  |  5 March 2021 1:15 AM GMT

உலகளாவிய புதுமை கண்டுபிடிப்பு பட்டியலில், முதல் 50 இடங்களில் இந்தியாவும் இணைந்துள்ளது. தொடர்ச்சியாக முன்னேறி வருகிறது. உயர்கல்வி, ஆராய்ச்சி மற்றும் புதுமை கண்டுபிடிப்பில் நிலையான வளர்ச்சியுடன், மாணவர்களுக்கும், விஞ்ஞானிகளுக்கும் புதிய வாய்ப்புகள் அதிகரிக்கின்றன.

பள்ளிகளில் உள்ள அடல் பயிற்சி கூடங்கள் முதல் உயர் கல்வி நிறுவனங்களில் உள்ள பயிற்சி மையங்கள் வரை பல விஷயங்களில் முதல் முறையாக கவனம் செலுத்தப்படுகிறது. தொடக்க நிறுவனங்களுக்கான தொழில்நுட்ப போட்டி என்ற புதிய பாரம்பரியம் நாட்டில் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த தொழில்நுட்ப போட்டி, நாட்டின் இளைஞர்களுக்கும், தொழிற்துறைக்கும் மிகப் பெரிய சக்தியாக உருவாகி வருகிறது. புதுமைகளை மேம்படுத்துவதற்கும் பயன்படுத்துவதற்கும், தேசிய முன்முயற்சி மூலம், 3500-க்கும் மேற்பட்ட தொடக்க நிறுவனங்கள் வளர்க்கப்படுகின்றன.

அதேபோல், தேசிய சூப்பர் கம்ப்யூட்டர் திட்டம் மூலம், பரம் சிவாய், பரம் சக்தி மற்றும் பரம் பிரம்மா என்ற மூன்று சூப்பர் கம்ப்யூட்டர்கள் புவனேஸ்வர் ஐஐடி, காரக்பூர் ஐஐடி மற்றும் புனே ஐஐஎஸ்இஆர் ஆகிய இடங்களில் நிறுவப்பட்டுள்ளன.

நாட்டில் உள்ள இன்னும் பல உயர் நிறுவனங்கள் சூப்பர் கம்ப்யூட்டர்களை பெறவுள்ளன. காரக்பூர் ஐஐடி, தில்லி ஐஐடி, புவனேஸ்வர் ஐஐடி ஆகியவற்றில் 3 அதி நவீன பகுப்பாய்வு மற்றும் தொழில்நுட்ப உதவி மையங்கள் செயல்படுகின்றன.

வானிலை தொடர்பான விஷயங்களில், முதல் முறையாக சர்வதேச தரத்தை நாடு எட்டியுள்ளது. இது ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கு வழிவகுத்துள்ளது மற்றும் நமது உலகளாவிய போட்டித்திறனையும் அதிகரித்துள்ளது. மேலும், புவி-இடம் சார்ந்த தரவுகள் துறையிலும், முக்கிய சீர்திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.

தேசிய ஆய்வு நிறுவனமும், நாட்டில் முதல் முறையாக அமைக்கப்படுகிறது. இதற்காக ரூ.50 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது ஆராய்ச்சி தொடர்பான நிறுவனங்களின் நிர்வாக அமைப்பை வலுப்படுத்தும் மற்றும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கான தொடர்பு, கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு இடையேயான தொடர்பை மேம்படுத்தும்.

உயிரி தொழில்நுட்பம் தொடர்பான ஆராய்ச்சிக்கு, இந்த பட்ஜெட்டில் ஒதுக்கீடு 100 சதவீதத்துக்கு மேல் அதிகரித்துள்ளது. இது அரசின் முன்னுரிமைகளை காட்டுகிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News