மலேசியாவில் 500 தமிழ்ப் பள்ளிகள்!! பிரதமர் மோடி பெருமிதம்!!

By : Bharathi Latha
பிரதமர் மோடி மனதின் குரல் 130-வது வானொலி நிகழ்ச்சியில் பேசினார். "நமது இந்தியச் சமூகம் மலேசியாவில் கலாச்சாரம், பண்பாட்டை போற்றி வருகின்றனர். அங்கு 500-க்கும் மேற்பட்ட தமிழ்ப் பள்ளிகள் உள்ளன" என்று பெருமிதம் தெரிவித்தார்.
மலேசியாவில் தமிழ்ப் பாடம் கற்பித்தல் மட்டுமன்றி மற்ற பாடங்களும் தமிழ் மொழிலேயே கற்பிக்கப்படுகின்றன என்றார். தெலுங்கு, பஞ்சாபி போன்ற மற்ற இந்திய மொழிகளுக்கும் மலேசியாவில் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது என்றும் கூறினார்.
இந்தியா - மலேசியா இடையில் வரலாற்று ரீதியாக, கலாச்சார உறவுகளை பேணுவதில், ‘மலேசிய இந்திய பாரம்பரிய சங்கம்' முக்கிய பங்கு வகிக்கிறது என்றார். கடந்த மாதம், மலேசியாவில் ‘லால் பாட் சேலை' அணிவகுப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டதாக கூறினார்.
ஸ்டார்ட் அப் இந்தியா திட்டத்தை தொடங்கி இன்று உலகளவில் 3-வது இடத்தை பிடித்துள்ளோம் என்றார். அடுத்த மாதம் இந்திய செயற்கை நுண்ணறிவின் தாக்கம் குறித்த மாநாடு நடைபெற இருப்பதாக கூறினார்.
