Kathir News
Begin typing your search above and press return to search.

வினை விதைத்தவன் வினை அறுப்பான் - தேசிய அளவில் முதலிடத்தில் ட்ரெண்டாகும் #GoBackStalin .!

வினை விதைத்தவன் வினை அறுப்பான் - தேசிய அளவில் முதலிடத்தில் ட்ரெண்டாகும் #GoBackStalin .!
X

ShivaBy : Shiva

  |  30 May 2021 11:18 AM IST

தமிழக முதல்வர் ஸ்டாலின் கோயம்புத்தூருக்கு இன்று செல்லவிருக்கும் நிலையில் அவரது வருகையை எதிர்த்து #GoBackStalin என்ற ஹேஷ்டேக் இணையதளத்தில் தேசிய அளவிலான ட்ரெண்டிங்கில் முதலிடத்தில் சென்று கொண்டிருக்கிறது.













கடந்த சில நாட்களாக கோயமுத்தூரில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையில் கோவை மாவட்டம் முதலிடத்தில் இருந்து வருகிறது. இருந்தபோதிலும் கோவையில் மே 13 முதல் மே 21 வரை மொத்தமாக 4714 தடுப்பூசிகள் மட்டுமே செலுத்தப்பட்டுள்ளன.

இதற்கு முக்கிய காரணம் அண்மையில் முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளை கோவை மற்றும் கொங்கு மண்டல மக்கள் நிராகரித்ததால் ஆளும் கட்சியான திமுக மாவட்டத்திற்கு தேவையான தடுப்பூசிகளை விநியோகிக்கவில்லை என்று பல அரசியல் கட்சித் தலைவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதனால் அரசியல் காரணங்களுக்காக கோவை மற்றும் கொங்கு மண்டல மக்களுக்கு தடுப்பூசி வழங்காமல் இருப்பதை ஆளும் கட்சியினர் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இதை தொடர்ந்து இன்று கோவைக்கு வரும் தமிழக முதல்வருக்கு தங்களின் எதிர்ப்பை காட்டும் விதமாக ட்விட்டரில் #GoBackStalin என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்து வருகின்றனர். முன்னதாக திமுக மற்றும் திமுகவின் தகவல் தொடர்பு பிரிவினர் பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்திற்கு வரும் போதெல்லாம் அவருக்கு எதிராக சமூக வலைதளங்களில் பிரச்சாரம் செய்து வந்ல நிலையில் தற்போது திமுக ஆட்சிக்கு வந்ததும் அவர்களுக்கே இந்த நிலை ஏற்பட்டுள்ளது இன்று சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News