Kathir News
Begin typing your search above and press return to search.

சென்னை IIT சாதனை: உலக டாப் 100 பல்கலைக்கழகங்கள் தரவரிசை பட்டியலில் இடம்!

சென்னை IIT சாதனை: உலக டாப் 100 பல்கலைக்கழகங்கள் தரவரிசை பட்டியலில் இடம்!

Bharathi LathaBy : Bharathi Latha

  |  5 March 2021 11:56 AM GMT

நடப்பு ஆண்டுக்கான உலக டாப் 100 பல்கலைக்கழகங்கள் அடங்கிய தரவரிசை பட்டியலில் சென்னை IIT, அண்ணா பல்கலைக்கழகம் இடம் பெற்றுள்ளன. மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நிஷாங், கியூ.எஸ். உலக பல்கலைக்கழக தரவரிசை 2021க்கான பட்டியலை நேற்று வெளியிட்டார். அப்போது அவர் பேசியதாவது, கடந்த சில ஆண்டுகளாக, வளர்ச்சிக்கான தொடர்ச்சியான கவனம் மற்றும் இந்திய உயர் கல்வியில் சீர்திருத்தம் ஆகியவற்றை அரசு மேற்கொண்டு வருகிறது.


இதன் விளைவால், இந்திய கல்வி நிலையங்களின் பிரதிநிதித்துவம் முன்னேற்றம் அடைந்து, உலக அளவில் புகழடைந்து, QS போன்ற மதிப்புமிக்க தரவரிசையையும் பெற்றுள்ளன. இந்த தரவரிசை மற்றும் தரமதிப்பீடு, சர்வதேச சிறப்பு வாய்ந்த நிலையை நோக்கிச் செல்ல ஊக்கமளிக்கும் வகையில் இந்திய கல்வி நிலையங்களிடையே ஆரோக்கிய போட்டியை ஏற்படுத்தியுள்ளது என தெரிவித்தார்.


டாப் 100 தரவரிசையில், பாம்பே IIT , டெல்லி IIT, சென்னை IIT, காரக்பூர் IIT, பெங்களூர் IIT, கவுகாத்தி IIT, பெங்களூர் IIM., அகமதாபாத் IIM, அண்ணா பல்கலைக்கழகம், டெல்லி பல்கலைக்கழகம் மற்றும் ஓ.பி. ஜிண்டால் பல்கலைக்கழகம் ஆகிய 12 இந்திய கல்வி நிலையங்கள் இடம் பெற்றுள்ளன. இவற்றில் சென்னை IIT யானது பெட்ரோலிய என்ஜினீயரிங் பிரிவில் உலக அளவில் 30வது தரவரிசையைப் பிடித்துள்ளது. உலக அளவில் பாம்பே IIT 41வது இடமும், காரக்பூர் IIT தாது பொருட்களுக்காக 44வது இடமும் பிடித்துள்ளன. இதேபோல், டெல்லி பல்கலைக்கழகம் வளர்ச்சி படிப்புகளுக்காக உலக அளவில் 50வது தரவரிசையை பெற்றுள்ளது என மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News