Kathir News
Begin typing your search above and press return to search.

தனித்தொகுதி இட ஒதுக்கீட்டை முறைகேடாக பயன்படுத்தினாரா திருமாவளவன்? வெடிக்கும் சர்ச்சை!

தனித்தொகுதி இட ஒதுக்கீட்டை முறைகேடாக பயன்படுத்தினாரா திருமாவளவன்? வெடிக்கும் சர்ச்சை!

ShivaBy : Shiva

  |  1 Jun 2021 5:07 AM GMT

கிறிஸ்தவ மதத்திற்கு மதம் மாறியதை மறைத்து சிதம்பரம் தொகுதி எம்பி திருமாவளவன் தனித் தொகுதியில் போட்டியிட்டு இட ஒதுக்கீட்டை தவறாக பயன்படுத்தியதாக அவர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டால் அவரது எம்பி பதவி பறிக்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிதம்பரம் மக்களவைத் தொகுதி தமிழ்நாட்டின் 39 மக்களவைத் தொகுதிகளுள் 27வது தொகுதி ஆகும். இத்தொகுதியானது பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினருக்காக ஒதுக்கப்பட்ட ஒரு தனித்தொகுதி. இந்த தொகுதியில் கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

ஆனால் திருமாவளவன் பட்டியல் இனத்தவருக்கு வழங்கப்படும் சலுகையை தவறாக பயன்படுத்தி வெற்றி பெற்றதாக LRPF என்ற ஒரு தன்னார்வ அமைப்பு கடலூர் மாவட்ட ஆட்சியர், தமிழக தலைமைச் செயலாளர், தமிழகத்தின் தலைமைத் தேர்தல் அதிகாரி மற்றும் மக்களவை சபாநாயகர் ஆகியோரிடம் புகார் அளித்துள்ளது. அந்த புகாரில் திருமாவளவன் தனது அரசியல் ஆதாயத்துக்காக இட ஒதுக்கீட்டை தவறாக பயன்படுத்தியுள்ளார் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மேலும் அந்த குற்றச்சாட்டில் அவர் தனியார் செய்தி சேனல் ஒன்றிற்கு அளித்த நேர்காணலையும் LRPF இணைத்துள்ளது. அந்த நேர்காணலில் "நான் கிறிஸ்தவ மதத்தை சார்ந்தவனாக இருக்கிறேன். கிறிஸ்தவ நிகழ்ச்சியில் பங்கு பெறுகிறேன்." என்று கூறியுள்ளார்.

இந்து, சீக்கியம் மற்றும் மதங்கள் அல்லாத வேறு ஒரு மதத்தை சார்ந்த எந்தவொரு நபரும் பட்டியல் சாதி (எஸ்சி) உறுப்பினராக கருதப்பட மாட்டார் என்று அரசியலமைப்பு (பட்டியல் சாதிகள்) ஆணை,1950 கூறுகிறது. கிறிஸ்தவ மதத்திற்கு மதம் மாறிய ஒருவர் பட்டியல் சாதி நிலையை கோர முடியாது என்று உச்சநீதிமன்றம் 2016ஆம் ஆண்டு வெளியிட்டுள்ள தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது.

"இதன் மூலம் அரசியலமைப்பு (பட்டியல் சாதி) ஆணை 1950க்கு எதிரான எஸ்.சி சாதி சான்றிதழை திருமவளவன் இன்னும் வைத்திருக்கிறார் என்பது தெளிவாகத் தெரிகிறது" என்று தனது புகாரில் LRPF தெரிவித்துள்ளது. மேலும் திருமாவளவன் தான் ஒரு கிறிஸ்தவர் என்ற உண்மையை மறைத்து சிதம்பரம் மக்களவை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார் என்றும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

முன்னதாக 2021 பிப்ரவரி மாதம் மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் மாநிலங்களவையில் ஒரு கேள்விக்கு பதிலளித்தபோது, ​​இந்திய அரசியலமைப்பு மற்றும் இந்திய சட்டப்படி, இட ஒதுக்கீடு சலுகைகளை கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாமிய மதங்களைத் தழுவியவர்கள் பெற முடியாது என்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News