Kathir News
Begin typing your search above and press return to search.

2030க்குள் இந்திய சாலைகளில் மின்சார வாகனங்கள்: பொலிவியாவில் இருந்த லித்தியம் வாங்க இந்தியா முடிவு!

2030க்குள் இந்திய சாலைகளில் மின்சார வாகனங்கள்: பொலிவியாவில் இருந்த லித்தியம் வாங்க இந்தியா முடிவு!

Bharathi LathaBy : Bharathi Latha

  |  1 March 2021 10:52 AM GMT

இந்தியா சுற்றுச்சூழல் நடைமுறைகளை மேம்படுத்துவதன் ஒரு படியாக 2030க்குள் நாட்டில் மின்சார வாகனங்கள் எண்ணிக்கையை அதிகரிக்க செய்வது இந்திய அரசின் கொள்கையில் ஒரு முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக லித்தியம் தேவை மிகவும் முக்கியம். எனவே லித்தியத்தின் மிகப்பெரிய கையிருப்புகளை கொண்ட நாடுகளில் ஒன்றான பொலிவியா இந்தியாவிற்கு தேவையான உலோகத்தை வழங்க, மேலும் மின்சார வாகனங்கள், மடிக்கணினிகள் மற்றும் ஸ்மார்ட் போன்களின் பேட்டரிகளை தயாரிப்பதில் பயன்படுத்தப்படும் இந்த உலோகத்தை இந்தியாவிற்கு வழங்குவதாக வாக்குறுதி அளித்துள்ளது.


FAME India கொள்கையின் கீழ், 2030 க்குள் குறைந்தது 30% வாகனங்கள் மின்சார பேட்டரிகளில் இயங்க வேண்டும் என்பது இந்தியாவின் திட்டம் உள்ளது. இதற்காக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அவர்கள் 3 நாள் சுற்றுப்பயணமாக பொலிவியாவில் இருந்து, பொலிவியாவின் ஜனாதிபதி ஈவோ மோரலஸுடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த பயணத்தின் முடிவில் இந்தியா பொலிவியா கூட்டு முயற்சியாக, இந்தியாவிற்கு தேவையான லித்தியம் கார்பனேட்களை பொலிவியா விநியோகம் செய்வதற்கு ஒப்புக்கொண்டது. மேலும் இந்தியாவில் லித்தியம் பேட்டரி மற்றும் செல்களை உற்பத்தி செய்வதற்கான தொழிற்சாலைகளையும் நிறுவுவதற்கு ஒரு பரஸ்பர உடன்படிக்கையை ஒப்புக் கொண்டது என்று இந்த பயணத்தின் முடிவில் அறிக்கையில் கூறப்பட்டது.


லித்தியத்தின் அறியப்பட்ட இருப்புக்களில் 40% க்கும் அதிகமானவை பொலிவியா நாடு வைத்திருக்கின்றன. அவற்றில் பெரும்பாலானவை தென் அமெரிக்காவில் உள்ள சலார் டி யுயூனியில் உள்ளன. சாலார் டி யுயூனி லித்தியம் நிறைந்த உலகின் மிகப்பெரிய உப்பு பிளாட் ஆகும். ஆகவே இதற்காக இந்தியாவைச் சேர்ந்த, கானிஜ் பிடேஷ் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் பிரதிநிதிகள் குழு லித்தியம் சுரங்கப் பகுதிகளுக்கு குறிப்பாக தென் அமெரிக்க நாட்டின் சலார் டி யுயூனிக்கு பயணம் செய்தது. கானிஜ் பிடேஷ் இந்தியா லிமிடெட், இந்திய சுரங்க அமைச்சகத்தின் கீழ் 3 சுரங்க பொதுத்துறை நிறுவனங்களின் கூட்டு முயற்சியாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.


பொலிவியாவின் அரசுக்கு சொந்தமான நிறுவனமான யசிமியான்டோஸ் டி லிட்டியோ பொலிவியானோஸ் கார்ப்ரேஷன் ஆகியவற்றுடன் இணைந்து தேசிய மிஷின் பிரதிநிதி குழு ஒத்துழைப்பை முன்னெடுத்துச் செல்வதற்காக இந்தியாவின் உருமாறும் இயக்கம் மற்றும் பேட்டரி இந்தியாவின் சார்பாக செயல்பட இருப்பதாக மத்திய அரசு அறிவித்தது. குறிப்பாக 2020ஆம் ஆண்டு மார்ச் 28 முதல் 30 வரை ஜனாதிபதி கோவிந்தின் பொலிவியா பயணத்தின் போது 8 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. இரு நாடுகளுக்கும் இடையே இருதரப்பு வர்த்தகம் 205% அதிகரித்து 2017-18 நிதியாண்டில் 772 மில்லியன் டாலர்களை எட்டியது இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News