Kathir News
Begin typing your search above and press return to search.

சீனாவின் அச்சுறுத்தல் குறித்து தி.மு.க., எம்.பி எழுப்பிய கேள்வி! பதிலளித்த மத்திய பாதுகாப்பு துறை இணை அமைச்சர் !

கடலோரம் மற்றும் கடல் பரப்பின் பாதுகாப்பை வலுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்றார்.

சீனாவின் அச்சுறுத்தல் குறித்து தி.மு.க., எம்.பி எழுப்பிய கேள்வி! பதிலளித்த மத்திய பாதுகாப்பு துறை  இணை அமைச்சர் !
X

G PradeepBy : G Pradeep

  |  7 Aug 2021 2:44 AM GMT

இந்திய கடலோர பிராந்தியத்தில் சீனாவின் அச்சுறுத்தல் குறித்து தி.மு.க., எம்.பி., தமிழச்சி தங்கபாண்டியன் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த மத்திய பாதுகாப்பு இணை அமைச்சர் அஜய் பட், கடலோரம் மற்றும் கடல் பரப்பின் பாதுகாப்பை வலுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்றார்.

மத்திய அமைச்சர் மேலும் தனது பதிலில் கூறியதாவது: அண்டை நாடுகளுடனான இந்தியாவின் உறவுக்கு சுதந்திரமான மதிப்புண்டு. அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை என்ற தெளிவாக வரையறுக்கப்பட்ட கொள்கையை அரசு கொண்டுள்ளது. அது ஸ்திரத்தன்மை மற்றும் வளத்துக்காக மக்கள் நலன் சார்ந்த கட்டமைப்புகளை உருவாக்குவதில் கவனம் செலுத்துகிறது. இந்திய பாதுகாப்பு மற்றும் பொருளாதார நலன் மீது தாக்கம் உண்டாக்கக் கூடிய எந்தவொரு விஷயத்தையும் அரசாங்கம் கவனமாக கண்காணித்து வருகிறது. அதனை பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறது.

இந்திய கடற்படை, மத்திய, மாநில கடலோரக் காவல் படை உள்ளிட்ட அமைப்புகள் ரோந்து மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன. மேலும் ரேடார்கள், தானியங்கி அடையாளம் கண்டறியும் அமைப்பு போன்றவற்றைப் பயன்படுத்தி மின்னணு கண்காணிப்பும் மேற்கொள்ளப்படுகிறது. கடலோர பாதுகாப்பு பிரச்னைகளில் பல்வேறு அமைப்புகளை ஒருங்கிணைப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளும் வகுக்கப்பட்டுள்ளன. கல்பாக்கம் மற்றும் கூடங்குளத்தின் பாதுகாப்பு மத்திய தொழில் பாதுகாப்பு படையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கூடுதலாக எதிரி விமானங்களை அழிக்கும் பிரிவுகளும் நிறுவப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

Image courtasy : Deccan Herald.

Dinamalar.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News