Kathir News
Begin typing your search above and press return to search.

BIS ஆளும் குழுவின் உறுப்பினர்களுக்கு மத்திய அமைச்சர் கடும் எச்சரிக்கை!

BIS ஆளும் குழுவின் உறுப்பினர்களுக்கு  மத்திய அமைச்சர் கடும் எச்சரிக்கை!

Bharathi LathaBy : Bharathi Latha

  |  2 March 2021 11:24 AM GMT

நேற்று நடைபெற்ற இந்திய தரநிலைகளின் ஆளும் கவுன்சில்(BIS) கூட்டத்தில் அனைத்து உறுப்பினர்களும் நோய் தொற்று காரணமாக வீடியோ கான்பரன்ஸ் மூலம் பங்கேற்றனர். இந்த வீடியோ கான்பரன்ஸ் மூலமாக மாநாட்டில் கலந்து கொண்ட சில உறுப்பினர்கள் தங்களுடைய கேமராக்களை செய்து வைக்காமல் மீட்டிங்கில் கலந்து கொண்டனர். இதனை கவனித்த மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் அவர்களை பங்கேற்கும் அனைத்து உறுப்பினர்களும் தங்களுடைய வீடியோவை ஆன் செய்து வைப்பதன் மூலம்தான் நீங்கள் மீட்டிங்கில் கலந்து கொள்கிறார்களா? என்பது உறுதி செய்ய முடியும்.



அப்படி இல்லை என்றால், நீங்கள் எங்கு இருக்கிறீர்கள்? என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்? என்பது அரசுக்கு தெரியாது. எனவே அனைவரும் தங்களுடைய வீடியோவை ஆன் செய்ய வேண்டும் என்று கூறினார். அவர் மேலும் கூறுகையில் ஆன் செய்ய முடியாதவர்கள் மீட்டிங்கில் இருந்து விலகிக் கொள்ளலாம். மேலும் நீங்கள் உங்கள் வீடியோக்களை ஆன் செய்து வைத்திருப்பதன் மூலம் நீங்கள் எவ்வளவு ஆர்வமாக அரசு நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறீர்கள் என்பது எனக்கு தெரியும் என்று கூறினார்.

இதற்கு முன்பு மீட்டிங்கில் கலந்து கொண்டவர்களின் தகவல்களை சேமித்து வைத்திருக்குமாறு, அமைச்சர் இந்திய தர நிர்ணய பணியகத்தின் பிரமோத் குமார் திவாரி கேட்டுக் கொண்டார். தொடர்ச்சியாக நீங்கள் இரண்டு அல்லது மூன்று மீட்டிங்கில் கலந்து கொள்ளவில்லை என்றால், நீங்கள் இந்த கவுன்சிலிங்கில் இருக்க விருப்பமா? இல்லையா? என்று கடிதம் உங்களை வந்து அடையும் என்று கூறினார். பிஸியாக உள்ளவர்கள் BIS இன் வேலையை செய்வதற்கு ஏன்? ஒப்புக் கொண்டீர்கள் என்று அவர் கோபமாகக் கூறினார். எனவே BIS வேலையின் போது நீங்கள் உங்களுடைய வேலையில் மட்டும் கவனம் செலுத்தி அதனை செய்தால் மட்டுமே முழு முடிவையும் நாம் வெற்றிகரமாக எதிர்பார்க்க முடியும் என்றும் அவர் கருத்து தெரிவித்தார்.


தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களும் BIS ஆளும் குழுவில் அங்கம் வகிக்கிறார்களா? என்று கோயல் மேலும் கேட்டார். "ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் அல்லது ஒரு மூத்த அதிகாரி ஒழுங்கற்றவராக இருந்தாலும், அவர்களையும் மாற்றவும்" என்று அவர் கூறினார்.

BIS சட்டம் 2016 இன் கீழ் நிறுவப்பட்ட BIS, பொருட்களின் தரப்படுத்தல், வகைப்படுத்துதல் மற்றும் தர சான்றிதழ் ஆகியவற்றின் செயல்பாடுகளை கவனிக்கிறது. இது நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சின் கீழ் செயல்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News