Kathir News
Begin typing your search above and press return to search.

இந்தியாவிற்கும் பிரதமர் மோடிக்கும் நன்றி - கனடாவில் வைக்கப்படும் பில் போர்டுகள்! #VaccineMaitri

இந்தியாவிற்கும் பிரதமர் மோடிக்கும் நன்றி - கனடாவில் வைக்கப்படும் பில் போர்டுகள்! #VaccineMaitri
X

Saffron MomBy : Saffron Mom

  |  11 March 2021 9:28 AM GMT

கனடாவிற்கு 5 லட்சம் டோஸ்கள் கோவிஷீல்ட் தடுப்பூசி இந்தியா அனுப்பி வைத்த பிறகு, பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பில் போர்டுகள் டொரன்டோ பகுதியில் அங்கங்கே வைக்கப்பட்டுள்ளன.

அந்த பில் போர்டுகளில் உள்ள வாசகங்கள், கனடாவிற்கு தடுப்பூசிகளை வழங்கிய இந்தியாவிற்கும் பிரதமர் மோடிக்கும் நன்றி. இந்திய-கனடா நட்பு வாழ்கவே என்று தெரிவித்துள்ளது.

மார்ச் 4ஆம் தேதி இந்தியா கொரானா வைரஸ் கோவிஷீல்ட் தடுப்பூசிகள் 5 லட்சம் டோஸ்களை கனடாவிற்கு அனுப்பி வைத்தது. கனடாவில் எம்பி மற்றும் பொது சேவைகளின் அமைச்சர் அனிதா ஆனந்த் கூறுகையில், AZ, கோவிஷீல்ட் தடுப்பூசிகள் தற்பொழுது கனடாவிற்கு வந்துள்ளது. சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியாவில் இருந்து 5 லட்சம் டோஸ்கள் காலை வந்துள்ளது 1.5 மில்லியன் டோஸ்கள் இன்னும் வரவிருக்கிறது. இது நடக்க முயற்சி செய்த அனைவருக்கும் எனது நன்றிகள். இதற்கு மேலும் இதேபோல் கூட்டான்மையை எதிர்பார்க்கிறோம் என்று தெரிவித்திருந்தார்.

இதற்கு முன்னதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வைரஸை எதிர்த்துப் போராடுவதில் இந்தியா அளிக்கும் ஆதரவிற்கும் கூட்டணிக்கும் நன்றி தெரிவித்தார். ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய அவர் இன்றைய நாளில், ஹெல்த் கனடா ஆக்ஸ்போர்டு covid-19 தடுப்பூசிகள் மற்றும் சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியாவின் கோவிட் தடுப்பூசிகளையும் அங்கீகரித்துள்ளது. தற்பொழுது நமக்கு கனடாவிn சுகாதார நிபுணர்களால் அங்கீகரிக்கப்பட்ட பாதுகாப்பான மூன்றாவது தடுப்பூசி கிடைத்துள்ளது.

இது மிகவும் உற்சாகப்படுத்த கூடிய விஷயம். இதனால் கூடிய விரைவில் அதிகம் பேர் தடுப்பூசிகள் செலுத்தப்படுவார்கள் என்று தெரிவித்திருந்தார்.

கொரோனா வைரஸ் பொது உலகளாவிய சுகாதார நெருக்கடியை எதிர்த்துப் போராடுவதில் இந்தியா முன்னிலை வகிக்கிறது. இதுவரை 40க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு இந்தியா கொரானா வைரஸ் தடுப்பூசிகளை பரிசாகவும் வணிக ரீதியாகவும் அளித்துள்ளது.

மார்ச் 4 வரை, இந்தியா 47 நாடுகளுக்கு 464. 29 லட்சம் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட (மேக் இன் இந்தியா) கோவிட் தடுப்பூசிகளை வழங்கியுள்ளது. இது உலகின் பல பகுதிகளிலும் இந்தியாவிற்கு நல்ல பெயரை பெற்றுத் தந்துள்ளது. இந்தத் தடுப்பூசிகளின் 71.25 லட்சம் பரிசாகவும், வணிக ரீதியாக 393.04 லட்சம் டோஸ்களும் வழங்கப்பட்டது.

இந்தியாவின் தடுப்பூசிகளை பெற்ற நாடுகளில் வளர்ந்த நாடுகள் தொடங்கி, வளரும் நாடுகள் வரை உள்ளன. ஆப்பிரிக்காவிலிருந்து கரீபியன் வரை, ASEAN நாடுகளில் இருந்து அண்டை நாடுகள் வரை இந்தியாவின் தடுப்பூசிகளை பெற்று வருகின்றன.

இந்தியாவின் குறிப்பிடத்தக்க முயற்சிகளில் ஒன்று CARICOM, அதாவது கரீபியன் நாடுகளான பார்படாஸ், டொமினிகா, செயின்ட் லூசியா, செயின்ட் கிட்ஸ் & நெவிஸ், செயின்ட் வின்சென்ட் & கிரெனடைன்ஸ் மற்றும் ஆன்டிகுவா & பார்புடா ஆகிய நாடுகளுக்கு தடுப்பூசிகளை அனுப்புவதாகும்.

இந்தியாவின் தாராள மனப்பான்மையை பாராட்டிய ஆன்டிகுவா மற்றும் பார்புடா பிரதமர் காஸ்டன் பிரவுன், சமீபத்தில் உலக தலைவர்கள் யாருடைய நடவடிக்கையுடனும் ஒப்பிடும் பொழுது பிரதமர் நரேந்திர மோடிதான் மிகவும் குறிப்பிடத்தக்க கருணை, தாராள மனப்பான்மை, பச்சாதாபம் ஆகியவற்றை காட்டியுள்ளார் என்று புகழ்ந்தார். கடந்த 100 வருடங்களில் தங்கள் நாடு பார்த்த மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த நடவடிக்கைகளில் இது எளிதில் இடம்பெறும் என்று அவர் தெரிவித்தார்.

மற்ற கரீபியன் தலைவர்களும் இந்தியாவிற்கு நன்றி தெரிவித்தனர். பார்படாஸ் பிரதமர் மியா ஆர்மர் கூறுகையில், பிரதமர் நரேந்திர மோடியால், பார்படாஸில் வசிக்கும் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நபர்களுக்கும் மற்றும் அதற்கு வெளியே ஆயிரக்கணக்கானவர்களுக்கு தடுப்பூசியை வழங்குவதன் மூலம் தனது தாராள மனப்பான்மையை வெளிப்படுத்துகிறார் என்றும் அவர் நல்ல உண்மையான ஆரோக்கியத்துடன் இருக்க விரும்புவதாகவும் தெரிவித்தார்.

அமெரிக்கா, பிரேசில், மெக்சிகோ மற்றும் அர்ஜென்டினா உள்ளிட்ட 34 நாடுகளின் குழுவான OAS என்ற ஒரு அமைப்பு ஏற்றுக்கொண்ட தீர்மானத்தில் இந்தியாவிற்கு ஒரு சிறப்பு நன்றியை தெரிவித்தனர்.

அவ்வமைப்பின் நிரந்தர கவுன்சிலின் தூதர் கூறுகையில், இந்தியா ஒரு அக்கறையுள்ள நாடு என்பதை நிரூபித்துள்ளது மேலும் உலகளாவிய நெருக்கடியின்போது சர்வதேச ஒத்துழைப்பில் இது உலகிற்கு ஒரு எடுத்துக்காட்டாக விளங்குகிறது. மேலும் இந்த தடுப்பூசி வழங்குவதற்காக என்று இந்தியாவால் எந்த ஒரு நிபந்தனையும் விதிக்கப்படவில்லை என்றும் இந்த இந்த நல்ல செயல் கரீபியன் நாடுகளால் மிகுந்த அக்கறையுடனும் நன்றியுடன் நினைவு கூறப்படும் என்றும் தெரிவித்தார்.

CARICOM நாடுகளுக்கு அங்கீகாரம் பெற்ற இந்திய ஹை கமிஷனர் டாக்டர் கே ஜே ஸ்ரீ்நிவாசா கூறுகையில், இந்த அறிக்கை கரீபியன் பிராந்தியத்தின் பொதுவான உணர்வுகளை எதிரொலிப்பது ஆக உள்ளது என விளக்கினார். நெருக்கடிகளின் போது இந்தியா முதலில் உதவிக்கரம் நீட்டுவதும், உலகின் மருத்தகமாகவும் இந்தியா இப்பகுதி முழுவதும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது எனவும், உலக தலைமை இடத்தில் இந்தியாவின் பங்கை மேலும் பலப்படுத்துவதில் இந்த தடுப்பூசி வழங்கும் திட்டம் மிகுந்த உதவிகரமாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.

கோவாக்ஸின் வசதியின் கீழ் இந்தியா தயாரித்த தடுப்பூசிகளை 11 நாடுகள் பெற்றுள்ளன. அவைகளில் 10 ஆப்பிரிக்காவை சேர்ந்தவை. கானா, ஐவரி கோஸ்ட், காங்கோ, அங்கோலா, நைஜீரியா, கென்யா, லெசோதோ, ருவாண்டா, செனகல், சூடான் மற்றும் ஆசியான் - கம்போடியாவைச் சேர்ந்தவர்கள். பாகிஸ்தானை தவிர இந்தியாவின் அனைத்து அண்டை நாடுகளுக்கும் இந்தியா தடுப்பூசிகளை வழங்கியுள்ளது. ஆப்கானிஸ்தான், மாலத்தீவு, நேபாளம் மற்றும் பங்களாதேஷ் ஆகியவை இந்தத் தடுப்பூசியைப் பயன்படுத்தத் தொடங்கின.

ஆப்கானிஸ்தான் சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் ராணுவ படையினருக்கு தடுப்பூசி வழங்கும் திட்டத்தை ஆஃப்கானிஸ்தான் தொடங்கியபோது அதன் ஜனாதிபதி அஷ்ரப் கானி, உலகின் மிகப் பெரிய ஜனநாயகம் மற்றும் அதிகப்படியான தடுப்பூசிகளை உற்பத்தி செய்யும் நாடு இந்தியா, ஆப்கானிஸ்தான் பாராளுமன்றம், அணைகள் கட்ட உதவி செய்ததோடு மட்டுமல்லாமல் நம்முடைய வாழ்க்கையையும் வாழ்வாதாரத்தையும் பாதுகாப்பதில் இந்தியா பெருமை வாய்ந்த கூட்டாளிகளாக இருப்பதாகவும் தெரிவித்தார். இந்தியா தனது உள்நாட்டு தடுப்பூசி திட்டத்தை ஜனவரியில் தொடங்கியது. அதற்குப் பின்னர் 2.3 கோடிக்கும் அதிகமான டோஸ்கள் வழங்கப்பட்டுள்ளன.

With Inputs from: Republic World and Wion News

Cover image credit: ANI news


Next Story
கதிர் தொகுப்பு
Trending News