Kathir News
Begin typing your search above and press return to search.

தருமபுரியில் பாரத மாதா கோயிலை அவமானப்படுத்திய தி.மு.க. அரசு. கொதிக்கும் இந்து முன்னணியினர் !

தருமபுரி ஆட்சியர் அலுவலகத்தில் பாரத மாதா கோயிலை அவமானப்படுத்தும் விதமாக திமுக அரசு சித்தரித்துள்ளதாக இந்து முன்னணி பேரியக்கம் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

தருமபுரியில் பாரத மாதா கோயிலை அவமானப்படுத்திய தி.மு.க. அரசு. கொதிக்கும் இந்து முன்னணியினர் !
X

ThangaveluBy : Thangavelu

  |  5 Aug 2021 6:55 AM GMT

தருமபுரி ஆட்சியர் அலுவலகத்தில் பாரத மாதா கோயிலை அவமானப்படுத்தும் விதமாக திமுக அரசு சித்தரித்துள்ளதாக இந்து முன்னணி பேரியக்கம் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.


தருமபுரி மாவட்டம், பென்னாகரம் தாலுகாவிற்குட்பட்ட பாப்பாரப்பட்டியில் பாரத மாதா கோயில் கட்டுவதற்காக தியாகி சுப்பிரமணிய சிவா மணி மண்டபம் அருகாமையில் கடந்த அதிமுக ஆட்சியின் போது நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வந்தது.


இதனிடையே ஆட்சி மாற்றம் நிகழ்ந்து திமுக அரசு அமைந்தது. பணிகள் நிறைவடையாமலேயே அமைச்சர் சாமிநாதன் கடந்த சில நாட்களுக்கு முன்னர் திறந்து வைத்து சென்றார்.


பாரத மாதா கோயிலில் நினைவாலயம் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ளது. பாரத மாதா கோயில் என்று வைக்காமல் நினைவாலயம் என்பது இறந்தவர்களுக்காக கட்டப்படும் மண்டபம் ஆகும். எனவே பாரத மாதா என்பவர் நம்மை வாழ வைக்கும் பூமி ஆகும்.

எனவே நினைவாலயம் என்ற பெயரை நீக்கி விட்டு பாரத மாதா ஆலயம் என்று பெயர் சூட்ட வேண்டும் என இந்து முன்னணியினர் 10க்கும் மேற்பட்டோர்கள் தருமபுரி ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.


அந்த மனுவில் உடனடியாக பெயரை மாற்றிவிட்டு, பாரத மாதா ஆலயம் என்று பெயர் சூட்ட வேண்டும். ஆகமவிதிப்பதி விக்ரஹம் வைத்து தினசரி வழிப்பாடு நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும்.

நாட்டில் உள்ள கோடிக்கணக்கான மக்கள் வழிபட்டு செல்லும் நிலையை உருவாகும். இதன் மூலம் மாவட்டத்திற்கு வருவாயை கிடைக்கும். எந்த ஒரு பணிகளும் நிறைவடையாமல் பாதியில் திறக்கப்பட்டதற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Source: Kathirnews

Picture Courtesy: Kathirnews


Next Story
கதிர் தொகுப்பு
Trending News