DRDO வெளியிட்ட '2DG' மருந்தை முதலில் ஆராய்ச்சி செய்த பதஞ்சலி நிறுவனம்!
By : Shiva
கொரோனா சிகிச்சைக்காக டிஆர்டிஓ மூலம் கண்டுபிடிக்கப்பட்ட '2DG' என்ற பவுடர் வடிவிலான மருந்தை மத்திய அரசு நேற்று பயன்பாட்டிற்கு அனுமதி அளித்தது. இந்த மருந்து முதன்முதலில் பதஞ்சலி ஆராய்ச்சியாளர்களால் ஆய்வு செய்யப்பட்டது என்று பதஞ்சலி ஆயுர்வேத் லிமிடெட் எம்.டி மற்றும் ஹரித்வாரில் பதஞ்சலி யோக்பீத்தின் இணை நிறுவனர் கூறியுள்ளார்.
முன்னதாக இந்த '2DG' பவுடர் வடிவிலான மருந்தை மிதமான மற்றும் தீவிர கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவசரகால பயன்பாட்டிற்காக பயன்படுத்தலாம் என்று DCGI அனுமதி அளித்த பின்னர் பதஞ்சலி ஆயுர்வேத லிமிடெட் மேலாண்மை இயக்குனர் ஆச்சார்யா பாலகிருஷ்ணன் தனது ட்விட்டர் பக்கத்தில் செய்தி ஒன்றை பதிவிட்டிருந்தார். அதில் "கொரோனா நோய்க்கு எதிராக நடத்தப்பட்ட பெரும்பாலான ஆராய்ச்சிகளுக்கு பதஞ்சலி முன்னோடி மைய்கல்லாக இருப்பதை நினைத்து நாங்கள் பெருமிதம் கொள்கிறோம்" என்று தெரிவித்திருந்தார்.
மேலும் ஆச்சாரியா பாலகிருஷ்ணன் மற்றும் மூன்று பேர் இணைந்து செய்த ஆராய்ச்சி கட்டுரையின் புகைப்படத்தையும் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார்
இது தொடர்பாக பதஞ்சலி நிறுவனர் ராம்தேவும் தனது ட்விட்டர் பக்கத்தில் செய்தி ஒன்றை பதிவிட்டிருந்தார். அதில் "கொரோனா நோய்க்கு எதிராக முதன் முதலில் ஆராய்ச்சி நடத்தி அதில் வெற்றி பெற்ற நிறுவனம் பதஞ்சலி என்று பெருமை கொள்வதாக" தெரிவித்திருந்தார்.
2-டியோக்ஸி-டி-குளுக்கோஸ் (2-டி.ஜி) மருந்தின் சிகிச்சை பயன்பாடு ஹைதராபாத் டாக்டர் ரெட்டியின் ஆய்வகங்கள் மற்றும் டி.ஆர்.டி.ஓவின் ஆய்வகம் மற்றும் அதனுடன் தொடர்புடைய அறிவியல் நிறுவனம் இணைந்து உருவாக்கியுள்ளது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். மேலும் இதன் முதல் ஆராய்ச்சியை பதஞ்சலி நிறுவனம் மேற்கொண்டது என்று அதன் நிறுவனர் தெரிவித்துள்ளார்.