"சோப்பு வாங்கும் சாமானியர் கூட வரி செலுத்துகிறார்கள்"சொகுசு கார் வழக்கில் நடிகர் தனுசுக்கு உயர்நீதிமன்றம் கண்டனம் !
அந்த தொகையில் பாதியை செலுத்திய தனுஷ், பின்னர் நுழைவு வரி செலுத்துவதில் இருந்து விலக்குகோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு இன்று நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது தனது மனுவில் தனுஷ் ஒரு நடிகர் என்று குறிப்பிடவில்லை? என நீதிபதி கேள்வி எழுப்பினார்.
By : Thangavelu
வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்த ரோல்ஸ்ராய்ஸ் சொகுசு காருக்கு நுழைவு வரி விலக்கு கேட்டு வழக்க தொடர்ந்த நடிகர் தனுசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
கடந்த 2015ம் ஆண்டு நடிகர் தனுஷ் ரோல்ஸ் ராய்ஸ் காரை இங்கிலாந்து நாட்டில் இருந்து இறக்குமதி செய்திருந்தார். அந்த காருக்கான நுழைவு வரியாக சுமார் 60 லட்சம் ரூபாய் செலுத்த வேண்டும் என்று வணிக வரித்துறை உத்தரவு பிறப்பித்தது.
அந்த தொகையில் பாதியை செலுத்திய தனுஷ், பின்னர் நுழைவு வரி செலுத்துவதில் இருந்து விலக்குகோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு இன்று நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது தனது மனுவில் தனுஷ் ஒரு நடிகர் என்று குறிப்பிடவில்லை? என நீதிபதி கேள்வி எழுப்பினார்.
தான் ஒரு நடிகர் என்பதை மறைத்தது குறித்து தனுஷ் விளக்கம் கொடுக்க வேண்டும் எனவும் அவர் உத்தரவிட்டார். அப்போது ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு நுழைவு வரி விலக்கு கேட்கும் மனுவை திரும்ப பெறுவதாக தனுஷ் தரப்பினர் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
ஆனால் அதனை ஏற்றுக்கொள்ளாத நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், ஒரு சோப்பு வாங்கும் சாமானியரும், விலை ஏற்றம் காரணமாக வெறும் 50 ரூபாய்க்கு பெட்ரோல் போடும் சாமானியரும் கூட வரி செலுத்தி வருவதாக கூறினார்.
அப்போது திங்கட்கிழமைக்குள் நுழைவு வரியை செலுத்த தயார் எனவும் தனுஷ் தரப்பு பதில் அளிக்கப்பட்டது.
இதனை மனுவாக தாக்கம் செய்யும்படி தனுஷ் தரப்புக்கு நீதிபதி உத்தரவிட்டார். மேலும், இன்று பிற்பகல் 2.15 மணிக்குள் தனுஷ் காருக்கான நுழைவு வரி பாக்கி பற்றி வணிக வரித்துறை தெரிவிக்க உத்தரவிட்டு, பிற்பகல் 2.15 மணிக்கு வழக்கில் இறுதி தீர்ப்பு வழங்கப்படும் எனவும் நீதிபதி கூறினார்.
பொதுமக்களுக்கு முன்மாதிரியாக இருக்கும் நடிகர்கள் இப்படி வரிசெலுத்துவதில் இருந்து தப்பிப்பதற்காக நீதிமன்றத்தை நாடுவது சரியல்லை. சாமானியரும் வரி செலுத்தும்போது, கோடிக்கணக்கில் சம்பளம் பெறும் நடிகர்கள் வரிசெலுத்த மனம் வராதது ஏன் எனவும் பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
Source: Polimer
Image Courtesy: Ndtv
https://www.polimernews.com/dnews/152114/இறக்குமதி-சொகுசு-காருக்குநுழைவு-வரி-விலக்கு-கோரிவழக்கு--நடிகர்-தனுஷ்க்குசென்னை-உயர்நீதிமன்றம்கண்டனம்