Kathir News
Begin typing your search above and press return to search.

'பிரதம மந்திரி உஜ்வல் யோஜனா 2.0' திட்டத்தை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார் !

கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் அடைந்து 8 கோடி பேருக்கு இலவச சமையல் கியாஸ் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

பிரதம மந்திரி உஜ்வல் யோஜனா 2.0  திட்டத்தை பிரதமர் மோடி இன்று  தொடங்கி வைக்கிறார் !

G PradeepBy : G Pradeep

  |  10 Aug 2021 12:15 AM GMT

புதுடெல்லி:

பிரதமரின் இலவச சமையல் கியாஸ் இணைப்பு திட்டம் கடந்த 2016-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. 5 கோடி ஏழை பெண்களுக்கு இலவச சமையல் கியாஸ் இணைப்பு வழங்கும் இலக்குடன் இந்த திட்டம் தொடங்கப்பட்டது.

பின்னர் இந்த திட்டத்தில் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தேயிலை தோட்ட தொழிலாளர்கள் உள்ளிட்ட 7 பிரிவுகளை சேர்ந்தவர்கள் சேர்க்கப்பட்டனர்.

அதன் தொடர்ச்சியாக 8 கோடி பேருக்கு இலவச சமையல் கியாஸ் இணைப்பு வழங்குவதற்கு இலக்கு மாற்றி அமைக்கப்பட்டது. அந்த இலக்கையும் கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் அடைந்து 8 கோடி பேருக்கு இலவச சமையல் கியாஸ் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் 'பிரதம மந்திரி உஜ்வல் யோஜனா 2.0' எனப்படும் பிரதமரின் இலவச சமையல் கியாஸ் இணைப்பு திட்டத்தின் 2-வது கட்டத்தை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.

காணொலி முறையில் பிரதமர் மோடி பங்கேற்கும் இந்த நிகழ்ச்சியில் உத்தரபிரதேச மாநிலம் மஹோபா நகரில் உள்ள பயனாளிகளுக்கு இலவச சமையல் கியாஸ் இணைப்புகள் வழங்கப்பட உள்ளன.

Image source : Hindustan Times.

Maalaimalar

Next Story
கதிர் தொகுப்பு
Trending News