Kathir News
Begin typing your search above and press return to search.

கிளப் ஹவுசில் பிரம்மாண்ட வரவேற்பை பெற்ற சத்குரு!

Club House invites sadhguru with huge reception.

கிளப் ஹவுசில் பிரம்மாண்ட வரவேற்பை பெற்ற  சத்குரு!
X

G PradeepBy : G Pradeep

  |  1 Aug 2021 2:58 PM IST

பிரபல சமூக வலைத்தளமான கிளப் ஹவுஸில் ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு பங்கேற்ற உரையாடல் நிகழ்வில் 72 நாடுகளில் இருந்து சுமார் 30 ஆயிரம் பேர் பங்கேற்று புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது.

ஆடியோ வடிவில் கலந்துரையாடும் சமூக வலைத்தளமான கிளப் ஹவுஸ் ஆப் இந்தியாவில் சமீபகாலமாக பிரபலம் அடைந்து வருகிறது. இந்நிலையில், கர்நாடகாவைச் சேர்ந்த 'விஸ்வவானி' என்ற ஊடகம் 'ஓபன் ஹவுஸ் வித் சத்குரு' என்ற தலைப்பில் ஒரு கலந்துரையாடல் நிகழ்வை கிளப் ஹவுஸில் நேற்று (ஜூலை 29) ஏற்பாடு செய்தது.

இதில் ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு சிறப்பு விருந்தினராக பங்கேற்று 'Life and its ways' என்ற தலைப்பில் உரையாற்றினார். இதில் கர்நாடக சட்டபேரவை தலைவர் திரு.விஸ்வேஷ்வர் ஹெக்டே ககேரி, மக்களவை உறுப்பினர் திருமதி.சுமலதா அம்ப்ரீஸ், முன்னாள் முதல்வர் திரு.எஸ்.எம்.கிருஷ்ணா, முன்னாள் அமைச்சர் திரு.பி.எல்.சங்கர், 'கிளப் ஹவுஸ்' ஆப்பின் சர்வதேச தலைவர் ஆர்த்தி ராம்மூர்த்தி, ஏர் டெக்கான் நிறுவனர் கேப்டன் திரு.கோபிநாத், சினிமா பிரபலங்கள், கீர்த்தி குமார், பிரியங்கா உபேந்தரா, ரக்‌ஷித் ஷெட்டி, பாடகர் விஜய் பிரகாஷ் உட்பட பல பிரபலங்கள் சத்குருவின் உரையை கேட்க அந்த ரூமில் இணைந்தனர்.



பொதுவாக, கிளப் ஹவுஸில் ஒரு ரூமில் அதிகப்பட்சமாக 8 ஆயிரம் பேர் மட்டுமே இணைய முடியும். அதன்காரணமாக, சத்குரு பேச ஆரம்பித்த சில நிமிடங்களுக்கு உள்ளாகவே அந்த ரூம் ஹவுஸ் ஃபுல் ஆனது. இதை அறிந்த கிளப் ஹவுஸ் பின்னர், பங்கேற்பாளர்களின் எண்ணிக்கையை படிப்படியாக 12 ஆயிரம் வரை அதிகரித்தது. இருந்தபோதிலும் ஏராளமானோர் அந்த ரூமில் இணைய முடியவில்லை. இதன்மூலம், கிளப் ஹவுஸ் வரலாற்றில் இது புது சாதனையாக பதிவாகி உள்ளது.



இந்நிகழ்வை விஸ்வவானி ஊடகத்தின் ஆசிரியர் திரு.விஸ்வேஷ்வர் பட் ஒருங்கிணைத்தார். இதில் கரோனா பெருந்தொற்று, ஆயுர்வேதம் மற்றும் நவீன மருத்துவ முறை, சமூக வலைத்தள கேலிகள், காவேரி கூக்குரல் திட்டத்தின் பணிகள், அரசியல் நடப்புகள் என பல்வேறு விஷயங்கள் குறித்த கேள்விகளுக்கு சத்குரு பதில் அளித்தார்.

இமேஜ் கோடெஸி : ஈஷா பௌண்டடின்.

Twitter 2

Next Story
கதிர் தொகுப்பு
Trending News