Kathir News
Begin typing your search above and press return to search.

ஆப்கானிஸ்தான்: கடந்த முறை எப்படி இருந்தது ஷரியாவின் கீழ் தலிபான் ஆட்சி ?

1996 முதல் 2002 வரை தலிபான்கள் சரியாக மிகத்தீவிரமான ஷரியாவின் விளக்கங்களை செயல்படுத்தினார்கள்.

ஆப்கானிஸ்தான்: கடந்த முறை எப்படி இருந்தது ஷரியாவின் கீழ் தலிபான் ஆட்சி ?

Saffron MomBy : Saffron Mom

  |  25 Aug 2021 12:20 AM GMT

ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா படையெடுத்து, ஆக்கிரமித்து 20 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது. அந்நாட்டை மறுபடியும் கட்டமைக்க அமெரிக்கா செய்த முயற்சிகள் அனைத்தும் தலிபான்கள் எழுச்சி பெறுவதை தடுக்க முடியவில்லை. தலிபான்கள் ஆப்கானிஸ்தானை இரண்டாவது முறையாக கைப்பற்றி வெளிநாட்டு சக்திகளிடமிருந்து ஆப்கானிஸ்தானுக்கு விடுதலை பெற்றுத் தந்ததாக தம்பட்டம் அடித்தாலும், அந்நாட்டு எல்லைகளுக்குள் வசிக்கும் ஆயிரக்கணக்கான மக்களுக்கு தங்களின் சுதந்திரம் குறித்த ஆழமான கவலைகள் வேரூன்றி உள்ளது.

இரண்டாவது முறை ஆட்சி அமைக்கப் போகும் தலிபான்கள் தாங்கள் மிகவும் மிதமான நிர்வாக அணுகுமுறையை பின்பற்றலாம் என்ற தோற்றத்தை உருவாக்க முயற்சித்தாலும், ஷரியா சட்டத்தை அமல்படுத்தியே தீருவோம் என்பதில் உறுதியாக இருப்பதால் மக்களின் பயம் நியாயமானதாகவே தோன்றுகிறது.

ஷரியா சட்டம் என்றால் என்ன?

இஸ்லாமிய நம்பிக்கையை பின்பற்றுபவர்களின் அன்றாட வாழ்க்கையை வழிநடத்தும் கட்டளைகளின் தொகுப்பாக ஷரியா உள்ளது. இது குர்ஆனில் இஸ்லாத்தின் பல்வேறு கோட்பாடுகள், முகமது நபியின் வாழ்க்கையின் பதிவுகள் பொதிந்துள்ள போதனைகளையும் உள்ளடக்கியது. ஷரியாவுக்கென்று தெளிவான வரையறுக்கப்பட்ட சட்டங்கள் இல்லை.

குர்ஆன் மதகுருமார்கள், அரசியல்வாதிகள், நீதிமன்றங்கள் ஆகியோரின் பல்வேறு விளக்கங்களுக்கு இது மாறுபடுகிறது. பல்வேறு விளக்கங்கள் ஒன்றுக்கொன்று முரண்படுகின்றன. ஷரியாவின் படி குற்றங்கள் என்று பார்த்தோமேயானால் அவை மூன்று வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

குறைந்த தீவிரமான 'தாஜிர்' என்பது நீதிபதி தன்னுடைய விருப்பத்திற்கு ஏற்றவாறு தண்டனைகளை வழங்கலாம். இரண்டாவது குற்றங்கள் 'குசேஸ்'. இதில் பாதிக்கப்பட்டவருக்கு என்ன கிடைத்ததோ அதே துன்பத்திற்கு குற்றவாளி உட்படுத்தப்படுவார். 'ஹூடுட்' குற்றங்கள் கடவுளுக்கு எதிரான குற்றங்கள். மது அருந்துவது, திருடுவது, கொள்ளையடிப்பது, தவறான கள்ள உறவு வைத்திருப்பது ஆகியவை இதில் விழும். இவை கல்லெறிதல், அங்கங்களை வெட்டுதல், நாடு கடத்துதல், தூக்கு போன்ற தண்டனைகளைக் கொடுக்கும்.

1996 முதல் 2002 வரை தலிபான்கள் சரியாக மிகத்தீவிரமான ஷரியாவின் விளக்கங்களை செயல்படுத்தினார்கள். இது பொது மரணதண்டனை மற்றும் உறுப்பு அங்கங்களை வெட்டுதல், இசை மற்றும் தொலைக்காட்சிகளுக்கு தடை விதித்தல், தங்களுடைய மதக் கடமைகளை நிறைவேற்றிய தவறிய ஆண்களை (உதாரணமாக ஒரு நாளைக்கு ஐந்து முறை பிரார்த்தனை செய்வது) அடிப்பது போன்றவை.

ஷரியாவின் சில விளக்கங்களின் கீழ் பெண்களுக்கும் ஆண்களைப் போலவே நான் சட்ட மற்றும் நிதி உரிமைகள் இருக்கின்றன என்று கூறப்படுகிறது. ஆனால் இதற்கு முன்னதாக இருந்த தலிபான் ஆட்சியில் இத்தகைய விளக்கங்கள் நடைமுறைப்படுத்தப்படவில்லை. இதற்கு முன்னால் இருந்த ஆட்சியில் பெண்கள் கிட்டத்தட்ட வீட்டு காவலில் வைக்கப்பட்டு ஒரு ஆண் உடன் சென்றால் மட்டுமே வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டனர். எந்த வேலையோ அல்லது கல்வியோ கற்க அவர்கள் அனுமதிக்கப்படவில்லை. எட்டு வயதுக்கு மேற்பட்ட எந்த பெண்ணாக இருந்தாலும் கண்டிப்பாக பர்கா அணிய வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்பட்டனர்.

உயர்ந்த குதிகால் ரொம்ப செருப்புகளை அணியக்கூடாது. பெண்களை புகைப்படம் எடுப்பது தடை செய்யப்பட்டது. கடைகள், புத்தகங்கள், வீடுகளில் பெண்கள் புகைப்படங்கள் காட்டுவது தடை செய்யப்பட்டது. இத்தகைய விதிமுறைகளை மீறிய பெண்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்பட்டது. பொது இடங்களில் சவுக்கால் அடிப்பது, கல்லெறிவது உட்பட. சில வழக்குகளில் மரண தண்டனை கொடுக்கப்பட்டது.

பெண்கள் வேலை செய்ய அனுமதிக்கப்படுவார்கள் மற்றும் பல்கலைகழக அளவில் படிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்று தலிபான்கள் மேம்போக்காக தெரிவித்திருந்தாலும், தங்கள் வேலை இடங்களை விட்டு வெளியே அனுப்பப்பட்ட பெண்களைக் குறித்த செய்திகள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளன.


Cover Image Courtesy: The NewYork Times

Next Story
கதிர் தொகுப்பு
Trending News