Kathir News
Begin typing your search above and press return to search.

சில வினோதமான பறவைகளும் அதன் சிறப்புகளும்

எல்லா பறவைகளும் ஒரே மாதிரியான திறனும் சிறப்புகளும் பெற்றிருப்பது இல்லை. பறவை இனத்தையும் தாண்டி சில சிறப்பியல்புகளையும் வினோத பழக்கங்களையும் கொண்ட பறவைகளைப் பற்றி காண்போம்.

சில வினோதமான பறவைகளும் அதன் சிறப்புகளும்

KarthigaBy : Karthiga

  |  3 Oct 2022 7:45 AM GMT

*புல்லாங்குழலில் இருந்து எழும் இனிய ஒளியைப் போல 'லூரியோல் 'என்ற குருவி ஒலி எழுப்பும்

* பென்குயின் பறவை பெரும்பாலும் கடற்கரைகளில் நடந்து தான் செல்லும். நீருக்குள் நீந்தவே இதன் இறக்கைகள் பயன்படுகின்றன. பென்குயின் பறவைகளால் பறக்க முடியாது.

* ஆங்கிலத்தில் ஹம்மிங் பேர்ட் எனப்படும் 'ரீங்கார சிட்டு' எனும் பறவை பின்னோக்கியே பறந்து செல்லும்.

* ஐரோப்பிய செங்கால் நாரைகள் கொண்டு வந்து கொடுக்கும் உணவு அதன் குஞ்சுகளுக்கு பிடிக்கவில்லை எனில் வேறு நாரைகள் இருக்கும் இடத்திற்குச் சென்று அதனிடமிருந்து உணவு வாங்கி சாப்பிடுமாம்

* 'கூகபுர்ரா 'என்ற பறவை மனிதர்களைப் போலவே சிரிக்கும் திறனை பெற்றிருக்கும் பறவையாகும்.

*தன்னுடைய கழுத்தை 360 டிகிரி கோணத்திற்கு முழுமையாக திருப்பக்கூடிய திறன் பெற்ற ஒரே பறவை 'ஆந்தை'.

*நாயைப் போலவே முகர்ந்து பார்த்து வேட்டையாடும் ஒரே பறவை 'கிவி'

Next Story
கதிர் தொகுப்பு
Trending News