Kathir News
Begin typing your search above and press return to search.

அமெரிக்கா: அலபாமா மாகாணத்தில் பள்ளிகளில் யோகா மற்றும் தியானத்திற்கு தொடரும் தடை!

அமெரிக்கா: அலபாமா மாகாணத்தில் பள்ளிகளில் யோகா மற்றும் தியானத்திற்கு தொடரும் தடை!

Saffron MomBy : Saffron Mom

  |  4 April 2021 1:45 AM GMT

அமெரிக்காவின் உள்ள அலபாமா மாநிலத்தில் பொதுப் பள்ளிகளில் மாணவர்களுக்கு யோகா கற்பிக்க அனுமதிக்கும் ஒரு சட்டம் புதன்கிழமை ரத்து செய்யப்பட்டது. ஒரு மாநில சட்டம் இயற்றுபவர், பல ஆண்டுகளாக தடை செய்யப்பட்ட இந்த நடைமுறையை திரும்பக் கொண்டுவர வேண்டும் என்ற முயற்சிகள் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது.

2016 ஆம் ஆண்டு நடத்திய ஒரு ஆய்வில் 36.7 மில்லியன் மக்கள் அமெரிக்காவில் யோகாவை பயிற்சி செய்கிறார்கள். 1993 முதல் அலபாமாவில் உள்ள பள்ளிகளில் யோகா தடை செய்யப்பட்டுள்ளது. இந்த சட்டம் திரும்பப் பெறப்பட்டால் யோகா ஒரு தன்னார்வ பயிற்சியாக அலபாமாவில் உள்ள பள்ளிகளுக்கு மறுபடியும் கொண்டு வரப்பட்டு இருக்கும்.

இந்த தடையை பற்றி வெளிவந்திருக்கும் அறிக்கையில், "பள்ளி பயிற்றுவிப்பாளர்கள், ஹிப்னாடிக் பழக்கங்கள், வழிகாட்டும் படங்கள், தியானம் மற்றும் யோகா எதையும் எந்த வழியிலும் ரூபத்திலும் பயன்படுத்த கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளன. நமஸ்தே என்ற வார்த்தையும் அங்கு தடை செய்யப்பட்டுள்ளது."

அமெரிக்காவில் இப்படிப்பட்ட தடையுடன் இருக்கும் ஒரே மாநிலம் அலபாமா தான். தடையை நீக்க, கிரே என்பவரின் மசோதாவை அலபாமாவில் சட்டம் இயற்றுபவர்கள் எதிர்த்து ஓட்டளித்தனர். அதாவது ஏற்கனவே இருக்கும் தடையே தொடர்கிறது.

மறுபடியும் இந்த மசோதாவை கொண்டு வர முடியும் என்றாலும் இது மிகப் பெரிய பின்னடைவாகும். பல கன்சர்வேடிவ் கிறிஸ்தவ குழுக்கள் யோகா பயில்வது ஹிந்து மதத்தை வளர்ப்பதாக தெரிவித்துள்ளனர். யோகா இந்து மதத்தின் அடிப்படையில் இருந்து வருவதால் சிறு குழந்தைகளுக்கு பொதுப் பள்ளிகளில் இவற்றை சொல்லிக் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்று அலபாமா குடிமக்கள் செயல் ப்ரோக்ராம் சட்ட ஆலோசகர் ஜான்சன் குறிப்பிடுகிறார்.

மற்றொருவர் குறிப்பிடுகையில், இந்த சட்டம் நிறைவேறி இருந்தால் சிறு குழந்தைகளின் வகுப்புகளுக்கு கூட வந்து யோகா சொல்லிக் கொடுக்க முடியும் என்றும் இது ஒரு ஆன்மீக முயற்சி என்றும் இதைச் சொல்லிக் கொடுக்க கூடாது என்பது பெற்றோர்களின் விருப்பம் எனவும் தெரிவித்தார். முத்திரைகள், மந்திரங்கள் மற்றும் நமஸ்தே உட்பட வாழ்த்துக்கள் வெளிப்படையாக தடை செய்யப்படும் என்றும் கூறியிருக்கிறது.

யோகா மாணவர்களுக்கு ரிலாக்ஸ் செய்ய உதவி, படிப்பில் கவனத்தை செலுத்த உதவும் என்று மற்றும் பலர் கூறுகிறார்கள். "நீங்கள் யோகா செய்தால் ஹிந்துவாகி விடுவீர்கள் என்பது தவறு. நான் பத்து வருடமாக யோகா செய்து வருகிறேன். நான் சர்ச் செல்கிறேன், நானும் கிறிஸ்தவன் தான்" என்று மசோதா கொண்டு வந்த கிரே கூறியிருக்கிறார்.

அலபாமா மக்களிடத்தில் யோகாவுக்கு எதிரான இந்த மனநிலை, ஒரு குழுவை சேர்ந்த கிறிஸ்தவர்களின் உலக பார்வையை பிரதிபலிப்பதாக இருந்தாலும், இரண்டு மிகவும் வேறுபட்ட கலாச்சாரங்களுக்கு இடையே உள்ள புரிதல் இன்மையும் இது தெளிவுபடுத்துகிறது.

ஏற்கனவே யோகாவை ஹிந்து மதத்தில் இருந்து தனியாக பிரித்து அதை ஒரு மதச்சார்பற்ற வெறும் ஒரு உடற்பயிற்சி தான் நிறுவ பல ஆண்டுகளாக அமெரிக்காவில் முயற்சி நடந்து வருகிறது. ஹிப் ஹாப் யோகா, பீர் யோகா எனப் பல விதங்களில் அதை காட்சிப்படுத்தி வருகிறார்கள்.


யோகாவை அலபாமா பள்ளிகளில் தடை செய்ய முடிந்ததற்கு, இந்தியாவில் யாரும் பக்கம் பக்கமாக கருத்துக்களை வெளியிட்டு அமெரிக்க கலாச்சாரம் எந்த அளவு குறுகிய மனப்பான்மையுடன் செயல்படுகிறது என எழுதவில்லை. இது சர்வதேச அரசியலில் இரட்டை வேடத்தையும் குறிக்கிறது.

Reference: TheCommuneMag

Next Story
கதிர் தொகுப்பு
Trending News