பங்களாதேஷ் இந்துக்கள் இனப்படுகொலைக்கு எதிராக குரல் எழுப்பும் துளசி கப்பார்ட்! @TulsiGabbard
By : Saffron Mom
முன்னாள் அமெரிக்க காங்கிரஸ் பெண்மணி துளசி கப்பார்ட் பங்களாதேஷை சேர்ந்த துன்புறுத்தப்படும் இந்து சிறுபான்மையினருக்காக குரல் எழுப்பி இருக்கிறார். பெங்காலி இந்துக்கள் மீதான பாகிஸ்தான் ராணுவத்தின் இனப்படுகொலையை கண்டித்து மட்டுமல்லாமல், இஸ்லாமிய தீவிரவாதத்திற்கு எதிராக உலகம் செயல்பட வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், காங்கிரஸின் ஒரு உறுப்பினராக, பங்களாதேஷில் உள்ள இந்துக்கள் மற்றும் மதச் சிறுபான்மையினரை பாதுகாக்க ஒரு தீர்மானத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறேன். அவர்கள் இன்றுவரை தாக்குதலுக்கு ஆளாகி வருகிறார்கள். பாகிஸ்தான் ராணுவம் மில்லியன் கணக்கான பெங்காலி ஹிந்துக்களை கொலை செய்து, கற்பழித்து, தங்களுடைய வீடுகளில் இருந்து துரத்தி அடித்தது. இதற்கு முழு முழுக் காரணமும் அவர்களுடைய மதம் தான்.
அவர் மேலும் கூறுகையில், மார்ச் 25, 1971 அன்று தான் பாகிஸ்தான் ராணுவத்தால் பெங்காலி இந்துக்கள் தாக்கபடத் தொடங்கினார்கள். இது ஹிந்து கிராமங்களிலும் அக்கம் பக்கங்களிலும் தொடங்கியது. முதலில் டாக்கா பல்கலைக்கழகத்தில் உள்ள ஜெகன்னாத் ஹால் என்ற ஹிந்துக்கள் தங்கும் விடுதியில் ஆரம்பித்தது. முதல் இரவு அன்றே 5 முதல் 10 ஆயிரம் இந்துக்கள் கொல்லப்பட்டனர். இந்த இனப்படுகொலை 10 மாதங்கள் தொடர்ந்து நடந்து 2 முதல் 3 மில்லியன் மக்கள் கொல்லப்பட்டனர்.
நூறு முதல் ஆயிரக்கணக்கான பெண்களும், சிறுமிகளும் கற்பழிக்கப்பட்டு 10 மில்லியனுக்கும் மேற்பட்ட இந்துக்கள் தங்கள் சொந்த வீடுகளை விட்டு விரட்டி அடிக்கப் பட்டனர் என்று தெரிவித்தார். மேலும் கூறுகையில், அமெரிக்க முன்னாள் செனேட்டர் டெட் கென்னடி இனப்படுகொலையை உணர்ந்து கொண்டதாகவும் தெரிவித்தார்.
இந்துக்கள் மற்றும் பிற மத சிறுபான்மையினர் இஸ்லாமிய தீவிரவாதிகள் துன்புறுத்துவது பங்களாதேஷின் சுதந்திரத்துடன் முடிவடைந்து விடவில்லை என்றும் குறிப்பிட்டார். சமீபத்தில் பிரதமர் நரேந்திரமோடி பங்களாதேஷுக்கு சென்றிருந்த பொழுது அங்கு உள்ள இந்து கோவில்கள் மீதான தாக்குதல்களை பற்றியும் பேசினார். மேலும் இஸ்லாமிய தீவிரவாதத்தை தோற்கடிக்கும் உறுதி கொள்ளுமாறு அமெரிக்காவை வலியுறுத்தினார்.