ஏர்.ஆர்.ரகுமான் அஸ்வின் குறித்து கூறிய வார்த்தை பலித்தது - என்ன தெரியுமா?
By : Amritha
தனியார் தொலைக்காட்சி ஆன விஜய் டிவி நிகழ்ச்சியில் நேற்று மக்களின் அதிக வரவேற்பைப் பெற்று குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியின் கிராண்ட் ஃபினாலே நடைபெற்ற போது ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர் ரஹ்மான் அவர்கள் போட்டியாளர்கள் அனைவருக்கும் அவரது வாழ்த்துக்களை தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அப்போது ஏஆர் ரஹ்மான் அவர்கள் ஒவ்வொருவரின் பெயரையும் குறிப்பிட்டு அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வந்த போது 'அஸ்வின் நீங்கள் எப்போது படத்தில் நடிக்க போகிறீர்கள்' என்று கேட்டார். அதற்கு அஸ்வின் உங்களுடைய இந்த வார்த்தை ஒன்றே போதும், நான் கண்டிப்பாக ஜெயித்து விடுவேன், என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.
இந்த நிலையில் நேற்று ஏஆர் ரஹ்மான் அவர்கள் அஸ்வினிடம் திரைப்பட வாய்ப்பு குறித்து கேட்ட நிலையில் தற்போது அஸ்வின் ஒரு திரைப்படத்தில் அறிமுகமாக இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
அஸ்வின் நடிக்கவிருக்கும் படத்தை அறிமுக இயக்குனர் ஹரிஹரன் என்பவர் இயக்க இருப்பதாகவும் இந்த படத்தை டிரைடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது. மேலும் இந்த திரைப்படத்தில் அஸ்வினுடன் 'குக் வித் கோமாளி' பிரபலம் புகழ் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.