இளைப்பாறுங்கள் சின்னக் கலைவாணரே - விவேக் குறித்து விக்னேஷ் சிவன் பதிவு!
By : Amritha
தமிழ் திரையுலகில் கருத்துக்கள் நிறைந்த காமெடியாக மக்கள் மனதில் சிந்திக்க வைத்தவர் காமெடி நடிகர் விவேக். அந்த வகையில் திரை உலகின் சின்ன கலைவாணர் என்றும் அழைக்கப்பட்டவர்.அவர் நேற்று மாரடைப்பு காரணமாக காலமானார். அவருடைய மறைவுக்கு திரையுலகினர் பலரும் தங்களது இரங்கலை சமூக வலைதளங்களில் பதிவு செய்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே இயக்குனர் விக்னேஷ் சிவன் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் விவேக் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் 'இளைப்பாறுங்கள் சின்ன கலைவாணரே' என்று பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பது: சமூக சீர்திருத்த கருத்துகளை அழுத்தமா பேசிய குரல் இனி நம்மிடையே இல்லை என்பதை ஏற்க மனம் மறுக்கிறது.
விஐபி பட நாட்களில் உங்களுடன் பழகிய நினைவுகள் நீங்கள் நட்ட மரங்களை போல் என்றும் என் மனதில் பசுமையாக இருக்கும். நாம் இருவரும் இணைந்து பணியாற்ற வேண்டும் என பல சந்தர்ப்பங்களில் பேசி இருக்கிறோம். ஆனால் அது இறுதிவரை நிறைவேறாமலே போனது என் வாழ்நாளில் பேரிழப்பு. இளைப்பாறுங்கள் சின்ன கலைவாணரே என்றும் விவேக், அப்துல்கலாம் புகைப்படங்களை பதிவிட்டு குறிப்பிட்டுள்ளார்.