"எனக்கு கொரோனா! என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்து கொள்ளுங்கள்"- திரை உலகை அதிர வைத்த மெகாஸ்டார்!

தனக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெலுங்கு திரையுலகின் மெகா ஸ்டார் அல்லு அர்ஜுன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். சமீபத்தில் பவன் கல்யாணுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, கடந்த 10 நாட்களுக்கும் மேலாக சிகிச்சையில் இருந்த நிலையில், சில நாட்களுக்கு முன்புவீடு திரும்பினார்.
அதற்குள் இன்னொரு மெகா ஸ்டாரான அல்லு அர்ஜுனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது தெலுங்கு திரை உலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இது பற்றி ட்விட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவில்,
அனைவருக்கும் வணக்கம். எனக்கு கொரோனா பாசிடிவ் என சோதனையில் உறுதியாகி உள்ளது. நான் என்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். என்னுடன் தொடர்பில் இருந்தவர்களும் தங்களை பரிசோதித்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். நான் நலமுடன் இருப்பதால் எனது ரசிகர்கள் மற்றும் நலம் விரும்பிகள் கவலைப்பட வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன். வீட்டிலேயே இருங்கள். பாதுகாப்பாக இருங்கள் என கேட்டுக் கொண்டுள்ளார்.
தான் தற்போது கொரோனா கட்டுப்பாடுகள், வழிமுறைகள் அனைத்தையும் பின்பற்றுவதாகவும் அல்லு அர்ஜுன் தெரிவித்துள்ளார்.