ட்விட்டர் சூரைப்புலியான சித்தார்த்.. பா.ஜ.க வெறுப்பு விமர்சனங்களை பேச மட்டும் தான் வாய் வருமா? வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்!

நடிகர் விவேக் மாதிரி நல்ல மனிதர்கள் உருப்படியான காரியம் செய்து சினிமா துறையில் புகழை தேடிக்கொண்டனர். நடிகர் சித்தார்த் மாதிரியான ஆட்கள் எதிர்மறையான விமர்சனங்கள் மூலம் குறுகிய காலத்தில் பிரபலமாகத் துடிக்கின்றனர்.
அரசின் மீது ஆயிரம் விமர்சனங்கள் இருக்கலாம். ஒரு மாநில முதல்வரை கன்னத்தில் அறைவேன் என்று சொல்வது என்ன மாதிரியான மனநிலைன்னு தெரியவில்லை.
உபி முதல்வரை கன்னத்தில் அறைவேன் என்று குறிப்பிடும் சித்தார்த் உபியை விட டெல்லி மற்றும் மகாராஷ்டிர மாநிலத்தில் கொரோனா பாதிப்பு உள்ள நிலையில் அந்த மாநில முதல்வர்களை விமர்சனம் செய்யாமல் இருப்பது ஏன் என்ற கேள்வியை நெட்டிசன்கள் எழுப்பி வருகின்றனர்
முதல்வரை விமர்சனம் செய்வது சித்தார்த்தின் கருத்து சுதந்திரம் என்றால், டெல்லி மற்றும் மகாராஷ்டிரா முதல்வர்களை விமர்சனம் செய்யாமல் உபி முதல்வரை மட்டுமே விமர்சனம் செய்கிறவர் என்றால் சித்தார்த் செய்வது பாஜக மீதான வெறுப்பு மட்டுமே என்பது தெரிகிறது என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ஏற்கனவே டூல்கிட் உருவாக்கப்பட்டு, அரசுக்கு எதிராக சினிமா பிரபலங்கள் செயல்பட்டு வருவது அம்பலமான நிலையில், சித்தார்த் மாதிரியான ஆட்கள் தொடர்ச்சியாக வெறுப்பு பிரச்சாரம் மேற்கொண்டு வருவது, மக்களிடையே குழப்பத்தை உண்டாக்கி வருகிறது.