சண்டைக் காட்சிக்கு நூற்றுக்கும் மேற்பட்டோர் தேவை - இயக்குனரின் கனவை வாரிக்கொண்டு போன கொரோனா! திணறும் டாப் ஹீரோஸ்!
By : Muruganandham
கொரோனா தொற்றின் தீவிரம் அதிகரித்துள்ளதை அடுத்து முன்னணி ஹீரோக்கள் நடிக்கும் படங்களின் படப்பிடிப்புக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கொரோனா தொற்று காரணமாக தொடர்ச்சியாக நடிகர், நடிகைகளும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தொற்றின் தீவிரம் அதிகரித்து வருவதால், முன்னணி ஹீரோ நடிக்கும் படங்களின் படப்பிடிப்புக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு கொரோனா பரவிய ஆரம்ப கட்டத்தில் லாக்டவுன் அறிவிக்கப்பட்டதால் சினிமாத் துறை மிகுந்த பேரிழப்பை சந்தித்தது. இப்போது மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால், பெரிய பட்ஜெட் படங்களின் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டுள்ளது.
இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்தின் சண்டைக் காட்சிக்கு, நூற்றுக்கும் மேற்பட்டோர் தேவை என்பதால், கொரோனா பரவலை கருத்தில் கொண்டு அதன் ஷூட்டிங் நிறுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
அஜித்தின் வலிமை பட வெளிநாட்டு படப்பிடிப்பு, கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரம், துருவ் விக்ரம் நடிக்கும் பெயரிடப்படாத படம், சிவகார்த்திகேயன் நடிக்கும் டான், மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் ஆகிய படங்களுக்குச் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
கொரோனா 2 வது அலை வேகமாக பரவி வருகிற நிலையில், இதைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. இதில் அத்தியாவசிய சேவைகள் மட்டுமின்றி, சினிமா துறையும் பலத்த இழப்பை சந்தித்து வருகிறது.