Kathir News
Begin typing your search above and press return to search.

நேற்று வரை பேசிக் கொண்டிருந்தவர்... தமிழ் திரை உலகில் தொடர்ச்சியான மரணங்களால் அதிர்ச்சிகுள்ளான நடிகர்!

நேற்று வரை பேசிக் கொண்டிருந்தவர்... தமிழ் திரை உலகில் தொடர்ச்சியான மரணங்களால் அதிர்ச்சிகுள்ளான நடிகர்!

MuruganandhamBy : Muruganandham

  |  30 April 2021 11:43 AM GMT

இயக்குனர் கே.வி.ஆனந்த் இழப்பை ஏற்றுக்கொள்ள முடியாமல், பல சினிமா பிரபலங்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். அவரது மறைவுக்கு நடிகர் சிம்பு இரங்கல் செய்தி வெளியிட்டு தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

அதில், தொடர்ச்சியான மரணங்கள் அதிர்ச்சி தருகிறது. மரணம் எதிர்பாராத ஒன்று தான் என்றாலும், நல்ல ஆரோக்கியத்தோடு இருப்பவர்களை, நம்மோடு தினமும் தொடர்பில் இருப்பவர்களை எதிர்பாராமல் இழப்பது அதிர்ச்சியளிக்கிறது. அதிர்ந்து பேசாத நல்ல மனிதர் கே.வி.ஆனந்த். கோ படத்தில் நான் நடிக்க வேண்டியது. அப்போதுள்ள சூழலில் தவிர்க்கும் படியாகிவிட்டது.

சமீபத்தில் அருமையான கதை ஒன்றை எனக்குச் சொல்லியிருந்தார். சேர்ந்து படம் பண்ணலாம் என சொல்லியிருந்தேன். தினமும் என்னோடு தொடர்பில் இருந்தார். நேற்று வரை பேசிக் கொண்டிருந்தவர் இன்று அதிகாலை மரணமடைந்துவிட்டார் என்று சொல்வதை மனம் நம்ப மறுக்கிறது. பொய்ச் செய்தியாக இருக்கக்கூடாதா என அங்கலாய்க்கிறேன்.

இவ்வளவு சீக்கிரம் அவரை இழந்திருப்பது மிகுந்த வருத்தத்திற்குரியது. ஒளிப்பதிவாளர்கள், இயக்குநராகி வெற்றி பெற்றவர்களில் கே.வி.ஆனந்த் முக்கியமானவர். நிச்சயம் பேசப்படும் நிறையப் படங்களை அவர் தொடர்ந்து தந்திருப்பார். அவசரமாகப் பயணித்துவிட்டார் இறைவனிடம். திரைத்துறைக்கு அவரின் மறைவு பேரிழப்பு. அவரை இழந்து நிற்கும் குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும், திரையுலகினருக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன். கடவுளின் கரங்களில் இளைப்பாறட்டும் என சிம்பு தெரிவித்துள்ளார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News