Kathir News
Begin typing your search above and press return to search.

எல்லாம் பொழப்ப பாருங்க! பொழப்ப பாருங்க! நான் அடுத்த படத்தில் படு பிஸி.. கருப்பன் பட நாயகியோடு உற்சாகமான உதயநிதி!

எல்லாம் பொழப்ப பாருங்க! பொழப்ப பாருங்க! நான் அடுத்த படத்தில் படு பிஸி.. கருப்பன் பட நாயகியோடு உற்சாகமான உதயநிதி!

MuruganandhamBy : Muruganandham

  |  1 May 2021 2:00 AM GMT

திமுக இளைஞர் அணித்தலைவர் உதயநிதி ஸ்டாலின் போலீஸ் அதிகாரி வேடத்தில் நடிக்கும் படத்தில், அவருக்கு ஜோடியாக கருப்பன் பட நடிகை நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

"ஆர்ட்டிகிள் 15" என்ற படம் இந்தியில் ஆயுஷ்மான் குரானா நடிப்பில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியானது. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்ற படம் அது.

இப்படம் தற்போது தமிழில் ரீமேக் ஆகப்போகிறது. அருண்ராஜா காமராஜ், இப்படத்தை இயக்குகிறார். இவர் ஏற்கனவே கனா படத்தை இயக்கியவராவார். இப்படத்தில் திமுக இளைஞர் அணித்தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக நடிக்கிறார்.

ஏற்கனவே கருப்பன் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்து பிரபலமான தன்யா ரவிச்சந்திரன், இப்படத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

கருப்பன் நடிகை தன்யா, இந்த படத்தில் ஊடக நிருபர் வேடத்தில் நடிக்கிறார். அதேபோல் நடிகர் என்று சொல்லப்படுகிறத திமுக இளைஞர் அணித்தலைவர் உதயநிதி ஸ்டாலின் போலீஸ் அதிகாரி வேடத்தில் நடித்து வருகிறார். அவர் போலீஸ் அதிகாரியாக நடிக்கும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News