இனி சிம்புவின் அரசியல் - வெளியானது மாநாடு படத்தின் பிரத்யோக ஸ்டில்கள்!

தமிழக அரசியல் களம் நேற்றைய தேர்தல் முடிவுகளுக்கு பிறகு ஓர் சீரான நிலையை அடைந்துள்ளது. இதனை தொடர்ந்து தமிழக சினிமா களம் சூடு பிடிக்க துவங்கியுள்ளது. தமிழக அரசியல் விறுவிறுப்பு ஓய்ந்ததை அடுத்து சிம்பு'வின் அரசியல் விறுவிறுப்பு அதிகமாகியுள்ளது.இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில், சுரேஷ் காமாட்சி தயாரிப்பில், சிம்பு நடிக்கும் 'மாநாடு' படத்தின் பிரத்தியோக ஸ்டில்கள் தற்பொழுது வெளியாகியுள்ளன. இது சிம்பு ரசிகர்களின் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.
இதனைதொடர்ந்து இப்படத்தில் நடித்து வரும் ஒய்.ஜி.மகேந்திரன் அவர்கள் மாநாடு படம் பற்றி கூறியபோது, "சிம்பு அவர்கள் பன்முக திறமை வாய்ந்தவர், அவருக்கு இந்த மாநாடு படம் திருப்புமுனையை கண்டிப்பாக ஏற்படுத்தும்" என கூறியுள்ளார்.
மேலும் கொரோனோ ஊரடங்கு தளர்வுகள் அமலுக்கு வரும் போது கண்டிப்பாக மீதமுள்ள படப்பிடிப்பு முடிந்து விரைவில் படம் வெளியாகும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். சில வருட இடைவேளைக்கு பின் மீண்டு அசுர வேகத்துடன் நடிக்க வந்துள்ள சிம்புவின் ரசிகர்களுக்கு இந்த செய்தி மிகுந்த சந்தோஷத்தை ஏற்படுத்தி உள்ளது.