ஸ்டாலினுக்கு வாழ்த்து கூறிய தமிழ் திரையுல பிரபலங்கள்!

மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து கூறிய சினிமா பிரபலங்கள்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் 6'ஆம் தேதி நடைபெற்றது. 234 தொகுதிகளிலும் நேற்று காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்றது. அதில் ஆரம்பம் முதல் இருந்தே தி.மு.க கூட்டணி முன்னணியில் இருந்து வந்த நிலையில் வாக்கு எண்ணிக்கைக்கு இறுதியில் சுமார் 159 தொகுதிகளை கைப்பற்றி தி.மு.க கூட்டணி தேர்தலில் வெற்றி கண்டுள்ளது.
இதனைதொடர்ந்து தமிழக முதல்வராக ஸ்டாலின் பதவி ஏற்கிறார். இதற்கு தமிழ திரையுலகில் இருந்து பிரமுகர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
அவற்றில் முக்கியமானவர்களின் வாழ்த்துக்கள், நடிகர் கார்த்தி "மிக முக்கிய தருணத்தில், தமிழக முதல்வராகும் திரு. @mkstalin அவர்கள், நமது தனிப்பெரும் அடையாளங்களான சமூக நீதி, மத நல்லிணக்கம்,கல்வி, மருத்துவம், சுகாதாரத்தோடு, வேளாண்மை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கும் முக்கியத்துவம் அளித்து,மக்கள் விரும்பும் நல்லாட்சி அமைத்திட வாழ்த்துக்கள்!" என தனது ட்விட்டர் பதிவில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான், "சமூக நீதி, கல்வி, சுகாதாரம் ஆகியவற்றில் தமிழ்நாடு வரலாறு காணாத வளர்ச்சியடைய, இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்கு ஓர் எடுத்துக்காட்டாய்த் திகழ, தி.மு.க கூட்டணிக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்!" என தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
இயக்குனர் பா.ரஞ்சித், "தமிழக மக்கள் ஆட்சி மாற்றத்திற்கான, தங்களது தெளிவான நம்பிக்கையான தங்களை @mkstalin தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்! சாதி மத வேறுபாடுகளை கடந்து சமூக நீதியை நிலை நாட்ட தங்களது தலைமையிலான ஆட்சியில் சமரசமற்ற முன்னெடுப்புகள் அமைய வாழ்த்துகள் !" என தனது ட்விட்டர் பதிவில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சிவகார்த்திகேயன், "தமிழக தேர்தலில் பெரும் வெற்றி பெற்றிருக்கும் @mkstalin அய்யா அவர்களுக்கும்,தன் முதல் வெற்றியை பதிவு செய்திருக்கும் @Udhaystalin சாருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்🙏👍 " என தனது ட்விட்டர் பதிவில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சூப்பர் ஸ்டார் திரு.ரஜினிகாந்த் அவர்கள், "நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலின் கடும் போட்டியில், திறம்பட அயராது உழைத்து, வெற்றி அடைந்து இருக்கும் என்னுடைய அன்பு நண்பர்
மதிப்பிற்குரிய மு.க.ஸ்டாலின் அவர்கள் நீண்ட ஆயுளுடனும், ஆரோக்கியத்துடனும் இருந்து அனைத்து தரப்பு மக்களும் திருப்தி அடையும் வகையில் ஆட்சி செய்து, தமிழகத்தை வளமான மாநிலமாக மாற்றி பெரும் பேரும் புகழும் பெற வேண்டும் என்று மனமார் வாழ்த்துகிறேன்" என தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் பல தமிழ் திரையுலகை சேர்ந்தவர்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.