கொரோனோ தொற்று காரணமாக பிரபல நடிகையின் சகோதரர் மரணம்!
By : Mohan Raj
கொரோனோ இரண்டாம் அலை இந்தியாவை உலுக்கி வருகிறது. இந்த நிலையில் சாமானிய அட்கள் முதல் பிரபலங்கள் வரை ஆட்கள் வித்தியாசமின்றி பலியாகி வருகின்றனர். இந்த நிலையில் பிரபல நடிகையின் சகோதரர் கொரோனோ தொற்றால் மரணமடைந்துள்ளார்.
பியா பாஜ்பாய், தனது சினிமா பயணத்தை 2008 ஆம் ஆண்டில் 'போய் சொல்லா போரம்' என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் தொடங்கியவர். பின்னர் அஜித்தின் 'ஏகன்' மற்றும் ஜீவாவின் 'கோ' ஆகிய படங்களில் புகழ் பெற்றார். பியா பாஜ்பாய் பின்னர் தெலுங்கு, மலையாளம், இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் நடித்து பெயர் பெற்றார்.
கொரோனா தொற்று காரணமாக நடிகை பியா பாஜ்பாயின் சகோதரர் உத்தரபிரதேசம், ஃபருகாபாத் மாவட்டத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும் நடிகை தனது ட்விட்டர் பக்கத்தின் மூலம் தனது சகோதரருக்கு வென்டிலேட்டர் உதவி வேண்டும் என கோரி இருந்தார். வெண்டிலேட்டர் உதவியை கொண்டுவர குடும்பத்தினர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டபோதும், அவரை காப்பாற்றமுடியவில்லை. சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இதனை தனது ட்விட்டர் பதிவில் பியா பாஜ்பாய் குறிப்பிட்டுள்ளார்.