"ஸ்டாலினுக்கு வாழ்த்து சொன்னா திரைப்பட வாய்ப்பு கிடைக்குமா?" - பிரியா பவானி சங்கரின் பரபரப்பு ட்விட்!
By : Mohan Raj
"முதல்வருக்கு வாழ்த்து சொன்னா திரைப்பட வாய்ப்பு கிடைக்கும்" என்கிற ரீதியில் நடிகை பிரியா பவானி சங்கரின் ட்விட் தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.
"மேயாத மான்" திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை பிரியா பவானி சங்கர், அதற்கு முன் விளம்பரங்களிலும், சின்னத்திரையிலும் நடித்து வந்தார். தமிழகத்தை சேர்ந்த நடிகை இவர் ஆதலால் தமிழ் நன்றாக பேசுவார், எழுதுவார். தற்பொழுது தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு அ.தி.மு.க அரசின் ஆட்சிகாலம் முடிவுக்கு வந்து தி.மு.க அரசின் ஆட்சிகாலம் துவங்கியுள்ளது. நடந்து முடிந்த சட்டபேரவை தேர்தல் முடிவுகளில் தி.மு.க பெரும்பான்மை பெற்றதால் தி.மு.க தலைவர் ஸ்டாலின் முதல்வராகிறார்.
தமிழ் திரையுலகை சேர்ந்த அனேக நடிகர், நடிகையர், தயாரிப்பாளர், இசையமைப்பாளர் என அனைவரும் தி.மு.க தலைவர் ஸ்டாலினுக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.
இந்த நிலையில் நடிகை பிரியா பவானி சங்கர் தனது ட்விட்டர் பதிவின் மூலம் "நீண்ட காலத்துக்கு பிறகு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் @mkstalin அவர்கள் தலைமையில் தமிழ்நாடு. பேரிடரிடையே பதவி ஏற்றாலும் இங்கிருந்து சிறப்பாக வழிநடத்துவீர்கள் என்று சாமானியர்கள் முன் எப்போதையும் விட பல மடங்கு நம்பிக்கையுடன் உங்களை பார்த்துக்கொண்டிருக்குறோம்.வாழ்த்துகள்🙏🏼😊" என குறிப்பிட்டு தி.மு.க தலைவர் ஸ்டாலினுக்கு வாழ்த்து கூறியிருந்தார்.
இதற்கு ரசிகர்கள் பல்வேறு கருத்துக்களை கூறி வந்தனர். அப்பொழுது
ஒரு ரசிகர் "மேடம் இன்னும் 5 வருஷத்துல redgiantmovies, sun pictures, cloud nine movies இதர பிற தயாரிப்பு நிறுவனங்களில் நடிக்கணும்ல பதறத்தானே செய்வாங்க" என நடிகை பிரியா பவானி சங்கரின் வாழ்த்தை கலாய்த்து ட்விட் செய்திருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக பிரியா பாவானி சங்கர், "ஆமாங்க ஐயா. ஒரே பதட்டமா இருக்கு. முதல்வர் ஆகிட்டீங்க வாழ்த்துகள்னு சொன்னா நாலஞ்சு கம்பெனில பட வாய்ப்பு தர்றதா உங்கள மாதிரி விவரம் தெரிஞ்சவங்க சொன்னாங்க. அதான் வாய்ப்பு தேடி ட்வீட் போட்டுகிட்டு இருக்கேன். என்ன ஒரு strategy இல்ல😎" என்று தான் பங்கிற்கு கலாய்த்து ட்விட் செய்திருந்தார்.
ஏற்கனவே தி.மு.க'வை ஆதரிக்கும் திரையுலக பிரபலங்கள் பட வாய்ப்பிற்காக ஆதரிக்கின்றனர் என்ற பேச்சு நிலவி வரும் வேளையில் பிரியா பாவனி சங்கரின் இந்த ட்விட் இணையத்தில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.