Kathir News
Begin typing your search above and press return to search.

தீபிகா படுகோனிற்கு கொரோனோ - அதிர்ச்சியில் ரசிகர்கள்!

தீபிகா படுகோனிற்கு கொரோனோ - அதிர்ச்சியில் ரசிகர்கள்!

Mohan RajBy : Mohan Raj

  |  5 May 2021 10:00 AM GMT

பாலிவுட் நடிகை தீபிகா படுகோனுக்கு கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனோ இரண்டாம் அலை தற்பொழுது அதி தீவிரமாக நாடு முழுவதும் வீசி வருகிறது. ஒருபுறம் தடுப்பூசி, ஊரடங்கு என அதனை தடுக்கும் நடவடிக்கைகள் முழுவீச்சில் நடந்து கொண்டிருந்தாலும் மற்றொருபுறம் சாமானிய மக்கள் முதல் பிரபலங்கள் வரை அனைவரையும் உருமாறிய கொரோனோ விடாமல் துரத்தி வருகிறது.

ஏற்கனவே பல உயிர்களை காவு வாங்கியிருந்தாலும் மேலும் இதன் தாக்கம் குறைய மேலும் சில காலம் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்பொழுது சினிமா நடிகை தீபிகா படுகோன் குடும்பத்தை கொரோனோ பாதித்துள்ளது. இது நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே அவரது தந்தையும், முன்னாள் பேட்மிட்டன் வீரருமான பிரகாஷ் படுகோன் கொரோனோ தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையில் தீபிகா படுகோனிற்கும் கொரோனோ தொற்று ஏற்பட்டிருப்பது அவரது ரசிகர்கள் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News