பிரபல இயக்குனருக்கு கொரோனோ - தொடரும் சோகம்!
By : Mohan Raj
தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான வசந்த பாலன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கொரோனோ இரண்டாம் அலை தற்பொழுது அதி தீவிரமாக நாடு முழுவதும் வீசி வருகிறது. ஒருபுறம் தடுப்பூசி, ஊரடங்கு என அதனை தடுக்கும் நடவடிக்கைகள் முழுவீச்சில் நடந்து கொண்டிருந்தாலும் மற்றொருபுறம் சாமானிய மக்கள் முதல் பிரபலங்கள் வரை அனைவரையும் உருமாறிய கொரோனோ விடாமல் துரத்தி வருகிறது.
ஏற்கனவே பல உயிர்களை காவு வாங்கியிருந்தாலும் மேலும் இதன் தாக்கம் குறைய மேலும் சில காலம் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது
இந்த நிலையில் தற்போது தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான வசந்த பாலன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார், அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
ஆல்பம், வெயில், அங்காடித் தெரு, அரவான், காவியத் தலைவன் போன்ற படங்கள் இவரது இயக்கத்தில் வெளிவந்துள்ளன, இவர் இயக்குனர் ஷங்கர் அவர்களிடம் உதவியாளராக இருந்து இயக்குனராக முன்னேறியது குறிப்பிடத்தக்கது.
இவர் பூரண குணமடைய இவரின் ரசிகர்கள் வேண்டி வருகின்றனர்.