Begin typing your search above and press return to search.
பெரிய பாதிப்பில் இருந்து மீண்ட அருண் பாண்டியன்!

By : Mohan Raj
பிரபல நடிகர் அருண் பாண்டியன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், இதய கோளாறில் இருந்தும் இவர் மீண்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
90'களில் அதிரடி ஆக்ஷன் நாயகனாக மேலும் தயாரிப்பாளர் அருண் பாண்டியன். சமீபத்தில் அப்பா - மகள் இருவரையும் மையப்படுத்திய த்ரில்லர் கதையாக உருவான 'அன்பிற்கினியால்' படத்தில் நடித்திருந்தார்.
இந்நிலையில் சமீபத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அருண் பாண்டியன், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். அப்போது இவரது இதய குழாயில் இரண்டு அடைப்புகள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டு உடனடியாக அதற்கான சிகிச்சைகளையும் மருத்துவர்கள் மேற்கொண்டனர். சரியான நேரத்தில் சிகிச்சை அளித்ததால் தற்போது அவர் பூரண நலத்துடன் உள்ளகாக அவரது மகள்கள் தெரிவித்துள்ளனர்.
Next Story
