Kathir News
Begin typing your search above and press return to search.

ஓடிடியில் வெளியாகும் தனுஷ் நடித்த கர்ணன் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

ஓடிடியில் வெளியாகும் தனுஷ் நடித்த கர்ணன் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
X

Mohan RajBy : Mohan Raj

  |  10 May 2021 3:00 PM IST

தனுஷ் நடித்த 'கர்ணன்' திரைப்படம் ஓடிடி தளமாகிய அமேசோன் ப்ரைம்'ல் வெளியாகிறது. இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில், கலைப்புலி தாணு அவர்களின் தயாரிப்பில், சந்தோஷ் நாராயணன் இசையில், தனுஷ் நடித்த படம் 'கர்ணன்' திரையில் ஏப்ரல் 9'ம் தேதி வெளியாகியது. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற 'கர்ணன்' இதுவரை வந்த தனுஷ் படங்களில் அதிக வசூல் செய்த படமாகும்.


1990'களின் பிற்பகுதியில் நடந்த ஓர் உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்ட இப்படம் சமூக வலைதளத்தில் பேசு பொருளாக மாறியது. இப்படம் தற்பொழுது ஓடிடி தளத்தில் வெளியாகும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. வரும் மே 14'ம் தேதி அமேசான் ப்ரைமில் வெளியாகும் என அமேசான் ப்ரைமின் அதிகாரப்பூர்வ இண்ஸ்டாகிராம் பதிவிட்டுள்ளது.

தமிழ் சினிமா ரசிகர்களிடையே இந்த அறிவிப்பு பலத்த வரவேற்பை பெற்றுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News